Wednesday, March 20, 2013

இந்திய அரசே உஷார்

இலங்கைப்போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. 
அதில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக எதிர்ப்புகளை பசுமைத்தாயகம் அமைப்பு பதிவு செய்து வருகிறது....

அந்நாட்டு பிரதிநிதி மகிந்த சமரசிங்கே அளித்த விளக்கம் பின்வருமாறு:-

2009 போருக்கு பிறகு, இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.நா.மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகள்,இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைத் தீர ஆராய வேண்டுமென்றும் தவறான முன் உதாராணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறைபாடுடைய, தவறான அர்த்தம் கற்பிக்கும் ஆவணங்களைக் காட்டி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏன்டா வீடியோல தெள்ள தெளிவா பதிஞ்சி இருக்கு... அத பாத்தும் அந்த ஆவணகளை பொய்னு சொன்ன, அத நம்புறதுக்கு அவங்க என்ன முட்டாள்கள.... ஆனாலும் இந்த ஜெனீவா 
ஆளுங்க அவன் சொல்றத பொறுமையா கேக்குறது பாத்த எதுவும் சரியா படலை..... இந்தியவை திரும்பி பார்க்க வெச்ச மாணவர்களுக்கு தான் நன்றி சொல்லணும். சரியான தீர்மானம் கொண்டுவரல, இதுக்கு மேலயும் மாணவர்கள் இருங்க தயார்!!!!! இந்திய அரசே உஷார்

No comments:

Post a Comment