உண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞரையோ முதல்வராக இருந்தால் என்ன நடந்திருக்கும்? போலீஸ் அராஜகத்துடன் முதலிலேயே அடக்கப்பட்டு இருக்கும்... பன்னீர் முதலில் கொஞ்சம் திணறினாலும் போலீஸாரிடம் சரியான உத்தரவு பிறப்பித்தது மட்டும் அல்லாது, தில்லிக்கு சென்று அவசர சட்ட வடிவை சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, வரைவை தயாரித்து, அமைச்சகங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி திரும்பி இருக்கிறார்... ஏதோ சட்ட நடைமுறைகளுக்கு பின் அவசர சட்டமாக நாளை சட்டசபையில் நிறைவேறுகிறது! எல்லாரையும் வருசக்கணக்கா நம்பிருக்கோம்ல? இவரை ஓரிரு நாட்கள் கூட நம்பாமல் மதுரை வந்தவரை திருப்பி அனுப்பியிருக்கிறோம்...
சின்னம்மா புகழ் பாடுகிறார், கூன் போட்டு நிற்கிறார் என்பதை தாண்டி இவர் ஒரு அணுக கூடிய முதல்வராக மரியாதையை கண்டிப்பாக பெறுகிறார்!
வாழ்த்துக்கள் திரு. பன்னீர்செல்வம்...
- ப்ளீஸ் சின்னம்மான்னு மட்டும் சொல்லாதீங்க சார். உங்க மேல இன்னும் நல்லமரியாதை வரும்.
This comment has been removed by the author.
ReplyDelete