Monday, December 24, 2012

மீண்டும் விருது வாங்கும் எண்ணமில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்




      
                                   ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆஸ்கார் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமது இசையால் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களை கடந்து ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியவர்.

கடந்த 1997ம் ஆண்டு தனது வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்ட ரஹ்மான், கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு பிறகு சமீபத்தில் ‘Infinite Love‘ என்ற தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் உலகம் முழுக்க சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், சமீபத்தில் வெளியான என்னுடைய ஆல்பத்தை இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளை வைத்து எடுத்துள்ளேன். இந்த ஆல்பத்தில் ‌எனது மகன் அமீனும் தோன்றியுள்ளான். ஆல்பமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

மீண்டும் ஆஸ்கார் கனவு எதுவும் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஏற்கனவே இரண்டு விருதுகளை வாங்கிவிட்டேன். எனவே மீண்டும் விருது எல்லாம் வாங்கும் எண்ணமில்லை என்றார்.

No comments:

Post a Comment