Sunday, January 22, 2017

பன்னீர்செல்வம்
உண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞரையோ முதல்வராக இருந்தால் என்ன நடந்திருக்கும்? போலீஸ் அராஜகத்துடன் முதலிலேயே அடக்கப்பட்டு இருக்கும்... பன்னீர் முதலில் கொஞ்சம் திணறினாலும் போலீஸாரிடம் சரியான உத்தரவு பிறப்பித்தது மட்டும் அல்லாது, தில்லிக்கு சென்று அவசர சட்ட வடிவை சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, வரைவை தயாரித்து, அமைச்சகங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி திரும்பி இருக்கிறார்... ஏதோ சட்ட நடைமுறைகளுக்கு பின் அவசர சட்டமாக நாளை சட்டசபையில் நிறைவேறுகிறது! எல்லாரையும் வருசக்கணக்கா நம்பிருக்கோம்ல? இவரை ஓரிரு நாட்கள் கூட நம்பாமல் மதுரை வந்தவரை திருப்பி அனுப்பியிருக்கிறோம்...
சின்னம்மா புகழ் பாடுகிறார், கூன் போட்டு நிற்கிறார் என்பதை தாண்டி இவர் ஒரு அணுக கூடிய முதல்வராக மரியாதையை கண்டிப்பாக பெறுகிறார்!
வாழ்த்துக்கள் திரு. பன்னீர்செல்வம்...
- ப்ளீஸ் சின்னம்மான்னு மட்டும் சொல்லாதீங்க சார். உங்க மேல இன்னும் நல்லமரியாதை வரும்.

Friday, January 20, 2017

இனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu

 

           
              ஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக இளைஞ்சர்கள்.  ஜல்லிக்கட்டின் கார்பொரேட் நோக்கம் நாம் அறிந்ததே . அதனை எதிர்த்து போராடும் நாம் நிரந்தர தடை நீங்கும் வரை போராட  வேண்டுகிறோம் .

               திமுக ,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள்.மாணவர்கள் போராட்டங்களில் தங்கள் குளிர் காய நினைக்கின்றன . திமுக சொல்லுறன் நமக்கு நாமே போன்ற பல திட்டங்கள் மக்களை எழுச்சி பெற செய்கின்றன . அதிமுக சொல்லுறன் சின்ன அம்மா உத்தரவின் பெயரின் அவசர சட்டம் இயற்றினார் முதல்வர்னு. டேய் அவரு முதல்வர் டா . ஐயோ பிஜேபி காங்கிரஸ் பத்தி பேச விரும்புல. இவனுங்க அடியோடு விரதனும்.. இப்ப கூட மோடி வாய தொறக்க கரணம் , அடுத்த தேர்தல்ல வண்டலூர் விஜிபி மைத்தளத்துல பேசணுமே  அதனாலதான்.

       மாணவர்களே நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான் ,போராட்டத்தில் அரசியால்   வேண்டாம் சினிமா வேண்டாம் (உண்மைகள் தமிழன் லாரன்ஸ் , R .J  பாலாஜி மேலும் பல உண்மை தமிழ் நடிகர்கள் மன்சூர் அலிகான்) போன்றவர்களை பாராட்ட வார்த்தை இல்லை.


         இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டமா இல்லை ,இது தமிழுக்கான போராட்டம்.

     பாண்டே என்ற ஒரு செய்தி தொலைக்காட்சி நெறியாலர்  கேட்கிறான் , மாணவர்கள் ஏன் ஜல்லிக்கட்டிற்கு மட்டும் போராடுகிறார்கள் என்று கேட்கிறார். அவருக்கு எங்கள் பதில் தமிழன பாதுகாக்கத்தான் ஒட்டு போட்டு அரசிவாதிகளை தேர்ந்து எடுத்தோம் . அவங்கள விட்டுட்டு எங்களை கேக்குற .

       தமிழ் கலாச்சாரத்துக்கு எந்த அரசியல்வாதியும் போராட மாட்டார்கள் நங்கள் தன போராடனும் ஏன் கலாச்சாரத்துக்கு. இலங்கை  தமிழர்களை கொன்னப்ப அரசியல் வாதிகள் ஜெனிவால வாய் தொறக்கல , காவேரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு வாய தொறக்கல,, இப்படியே போன ஏன் ஏன் இனம் போல் கலாச்சாரமும் அழிஞ்சிடும். டேய் பாண்டே புரியுதா.


அடுத்து நம்ப பன்னீர் நீங்க எப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலைல இருக்கீங்கன்னு தெரியுது வெளிப்படையா சொல்ல தேவ இல்ல. இப்படி ஒரு அதிகாரம் தேவையா .


சிலர் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை கேட்கிறார்கள் ,அவர்கள் உணர்ச்சி புரிகின்றது ,அனால் வெள்ளையனை முதலில் எதிர்த்து இந்தியாவிற்காக போராடியவன் நம் தாத்தன் பாட்டன் வா.ஊ.சி , வீரபாண்டியன் கட்ட பொம்மன் போன்றவர்கள் தான் , அதனால் நம் இந்தியாவையும் காப்பாற்ற போராடுவோம்

 இறுதியாக அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி நமதே

காளையும் துள்ளி வரும் ,   காவேரியும் துள்ளி வரும் .