சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை
மேல் முறையீடு செய்தது தமிழக அரசு.
அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலமையிலான குழு காலை 10.30- மணிக்கு முதல்
வழக்காக இதனை பதிவு செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ்
தலைமையிலான பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிப்பதாகக் கூறியுள்ளது.
ஆனால் தடையை நீக்கத்துக்கு தடை விதிக்கவில்லை.
எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட்டே தீர வேண்டிய கட்டாயம் தியேட்டர்களுக்கு
ஏற்பட்டு விட்டது.
அரசின் விருப்பத்துக்கு மாறாக இந்தப் படத்தை தயக்கத்துடன் வெளியிட்டுள்ளனர்
திரையரங்க உரிமையாளர்கள்.
பிற்பகல் விசாரணையின் போது படத்துக்கு தடை விதிக்கப்பட்டால், உடனடியாக
படத்தை நிறுத்திவிடுவதாக தியேட்டர்கள் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு,
படத்தை திரையிட்டுள்ளனராம்.
No comments:
Post a Comment