Friday, August 9, 2013

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! 

ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.


இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.

“”என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள்.


எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை.

திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம்.




ஹாஸ்டலுடன் சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல் வார்டன் சீதாபதி எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்… “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.


பையனைத் தேடி அலைஞ்சு திரிஞ்சு சலிச்சுட்டோம். இடையில் ஒரு நாள், தனுஷ் சன்.டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்தாப்ல. நான் மதுரைக்காரன் என்றும், மதுரை பக்கத்தில மேலூரை சேர்ந்தவன் என்றும்… “என்னடா.. இவனுக்கு தேனிதானே சொந்த ஊரு, அப்புறம் ஏன் மேலூர் என சொல்றான்?’ என சந்தேகம் வர… அக்கம், பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலைதான் தனுஷ் என சொல்ல ஆரம்பிச்சாங்க. அதற்கப்புறம் தான் கலையோட போட்டோ எல்லாம் தேடிப் பிடிச்சு, ஒத்துவைச்சுப் பார்த்தால்… உண்மை எனக்கு தெரிஞ்சது. பிறகுதான் என் கலையை மீட்காமல் விடுவதில்லை எனப் போராடிக் கொண்டிருக்கிறேன்.




ஏன் சார்… என்னையப் பாருங்க. என் முகச்சாயல்தானே அவனுக்கு. இடையில் நான் வேலை பார்க்கிற சிவகங்கை பஸ்-ஸ்டாண்டில் “வேங்கை’ படம் சூட்டிங் நடத்தினாங்க. அப்ப நான் இல்லை. ஆனால், டிரைவர் ஆபிரகாம் நேராக தனுஷ்கிட்ட போய், “உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு’ என சொல்லியிருக்காரு. “ஏன் கஷ்டப்படணும். என்னை வந்துப் பார்க்கச் சொல்லுங்க…”னு சொல்லிட்டு ஷூட்டிங் போயிட்டான் கலை. நான் இருக்கிற ஊர்ல, வேலை பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று. அதை நிரூபிக்க போராடிக்கிட்டு வருகிறேன். சி.எம். செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன். விசாரிக்க சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொன்னாங்க.


டெய்லி அலைந்தேன். அப்புறம் “பெரிய இடத்து விவகாரம்’ என சொல்லிட்டாங்க.

அதற்குப் பிறகு எங்க ஊரு நடிகர் கஞ்சா கருப்புகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவரும் “இதிலே நான் தலையிடமுடியாது’ எனக்கூறி ஒதுங்கிகிட்டார். என் மகள் கல்யாணத்திற்குப் பத்திரிகை அனுப்பிக் கூட அவன் வரலைங்க. அவன் சம்பாதிப்பதில் சல்லிக் காசு கூட எங்களுக்கு வேண்டாம். என் மகன் தானென்று தனுஷ் சொன்னாப் போதும். அதை நிரூபிப்பதற்கான எந்த டெஸ்ட்டிற்கும் நான் தயாராய் இருக்கேன்” என கண்ணீர் வடித்தார் கதிரேசன்.

தனுஷ் படங்களையும், தன் மகன் கலைச்செல்வனின் படங்களையும் ஒத்து வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார் கலையின் தாய் மீனாள். “”உறுதியாய் சொல்றேன்… கலைச் செல்வன்தான் தனுஷ். பெத்தவளுக்குத் தெரியாதா, பிள்ளை யாரென்று..? கொட்டக்குடிப் பக்கத்தில “ஆடுகளம்’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தப்ப நாங்களும் அங்கே போனோம். தனுஷ் சேவல் விட்டுக்கிட்டிருந்தான். நான் கலை, கலைன்னு கத்தினேன். மைக் வச்சு அவங்க கத்தினதால் அவனுக்கு கேட்கலை போல. தனுஷ் யாருக்காகப் பயந்துக்கிட்டு இருக்கான் எனத் தெரியவில்லை? இந்த பிரச்சினை அவனுக்கு நல்லாவே தெரியும்..! வெளியில் வந்து உண்மையை சொன்னால் போதும். மற்றபடி எந்த சொத்து சுகத்துக்கும் நாங்க ஆசைப் படலை” என்றார் தாய் மீனாள்.


இது ஒரு புறமிருக்க முன்னதாக, தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தின் போது, “”எங்களது பிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள்” என மதுரை தவிட்டுசந்தையை சேர்ந்த முருகபாண்டி, பூமி ஆகிய இருவர் கஸ்தூரி ராஜாவை வற் புறுத்த, அவரோ… “5 லட்சம் கேட்டு தன்னை மிரட்டுகிறார்கள்’ என வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்ய… இருவரும் காவல்துறையினரால் மிரட்டப் பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரிலிருந்து கடத்தப்பட்ட கலைச்செல்வன்… குழந்தைத் தொழிலாளியாக கஸ்தூரி ராஜாவிடம் விடப்பட… அவரோ, தன்னுடைய “துள்ளுவதோ இளமை’ படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர் வராததால் அந்த படத்தினில் கலைச்செல்வனை தனுஷாக அறிமுகப்படுத்தினார் என்றும், தொடர்ந்து திரையுலகில் தனுஷ் பிரகாசிக்க, அப்பொழுதுதான் குழந்தைத் தொழிலாளியாக விடப்பட்ட கலையைக் கேட்டு கஸ்தூரி ராஜா வை மிரட்டியுள்ளனர் மதுரை வாசிகள் என்றொரு தகவல் கோடம்பாக்கம் ஏரியாவில் இன்றுவரை கிசுகிசுக்கப்படுவதும் உண்டு. திருப்பத்தூரில் கலைச் செல்வன் காணாமல் போன தாகப் பதியப்பட்ட வழக்கு இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது.


தனுஷை சுற்றும் இந்த சர்ச்சைகளுக்கு அவரின் வார்த் தைகள்தான் முற்றுப்புள்ளியே!


courtesy:tamilspace

No comments:

Post a Comment