Thursday, February 14, 2013

சிந்திங்கள் மக்களே

       
               மொபைலில் "வாட்டர்" என்று ஸ்டோர் செய்திருப்போம்..அது வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ரமேஷாக இருக்கும்..ரமேஷ் என்ற பெயர் இந்த அவசர உலகத்தில் தேவை இல்லாதது..தண்ணீரைத் நாம் போகஸ் செய்கிறோம்..அப்படியே இங்க பாருங்க...ரெண்டு இளைஞர்கள் பேசுகிறார்கள்.."ஃபிகர்" என்ற வார்த்தை சரளமாக புழங்குகிறது.. பெண்ணை ஒரு மனுஷியாக பார்ப்பதில்லை..வடிவம் மற்றும் உடலை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.. உடலை தெரிந்தோ தெரியாமலோ போகஸ் செய்கிறார்கள்..இது பெண்ணை ஒரு போகப்பொருளாக ட்ரீட் செய்யும் ஆழ் மனத்தின் வெளிப்பாடு தானே ?

"அந்த ஃபிகரை ஈசியா மடக்கலாம்" என்று சர்வசாதரணமாக பேசுவார்கள்...இப்படி ஒரு பெண்ணின் சுயமரியாதையை இழிவு படுத்திப் பார்க்கும் இளைஞர்கள் தான் இன்று வினோதினியின் இறப்புக்கு RIP சொல்கிறார்கள்..இளைஞர்கள் என்று இல்லை..பத்திரிக்கைகள் கூட இப்படித்தான் செய்கின்றன.."நயன்தாரா யாருக்கு?" ன்னு ஒரு பத்திரிக்கை கவர் ஸ்டோரி எழுதுவதை விடவா ஒரு பெண்ணை இழிவு படுத்த முடியும் ? வண்டி ஓட்டும் போதுகூட தவறு செய்யும் இன்னொருவரை அவன் அம்மாவை சொல்லித்தான் திட்டுகிறார்கள்..இதெல்லாம் மாறுவது எப்போது? எருமை ஏரோப்ளேன் ஓட்டும் போதா?

No comments:

Post a Comment