Tuesday, February 19, 2013

111 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு

சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு. ஆனால் 111 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.  



             அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர். அடோல்ப் சைலெட் 2.5 வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த விளக்கை கண்டுபிடித்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார். மேலும் அவர் தனது குறிப்பில் “இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்கமுடியாது” என்று எழுதி வைத்துள்ளார். 

            இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரியவைக்கப்பட்ட இந்த மின்விளக்கு கடந்த 111 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. 

No comments:

Post a Comment