விடாது காதல் பாகம் 6

விடாது காதல் பாகம் 6
  
            
       இருவரும் சில நிமிடங்கள் பேச்சற்று அமைதியாக இருந்தனர். இருவரின் மௌனத்தையும் கலைத்தான் பிரகாஷ். “இன்னும் எவ்வளோ நேரத்துக்கு டா பேசாம ஸ்மைல் பண்ணிட்டு இருப்பீங்க” என்று கேட்க இருவரும் சிரித்து விட்டு பிரகாஷை ஜான்சிக்கு அறிமுகம் செய்து வைத்தான் ராஜா. ஜான்சியும் தன் தோழி பவித்ராவை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். ராஜா ஒரு அழகிய பரிசு பொருளை ஜான்சிக்கு அளித்தான். அது அவள் மனதை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் பரிசு பொருளின் அழகோ!! இல்லை பரிசை கொடுத்தவரின் மீது இருந்த பாசமோ, நேசமோ!!! அது அவளும் அறியாததே!!! சற்று நேரம் கடற்கரையிலேயே தங்கள் பொழுதை கழித்து விட்டு கிளம்பும் போது ஜான்சியை மறுநாள் சந்திக்க வரும்படி அழைத்தான்.
அவர்கள் திட்டமிட்டபடி ராஜா தன் தோழர்கள் மூவருடனும், ஜான்சி தன் தோழிகள் இருவருடனும் மகாபலிபுரத்திற்க்கு சென்றனர். அவளை சந்திக்க வரும் முன்னரே நண்பர்கள் அனைவரும் காதலை தெரிவிக்க பல யோசனைகள் தெரிவித்தனர். இன்று எப்படியாவது தன் காதலை தெரிவித்து விட முடிவு செய்திருந்தான் ராஜா. இருவரும் பார்த்து கொண்ட முதல் நொடி ஜான்சி தன் அழகிய புன்னகையுடன், கண்களை சிமிட்டி “ ஹாய் ராஜா! “ என்ற சொன்ன அழகில் மயங்கி நின்றான் ராஜா. இவளே நம் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என உறுதியாக இருந்தான்.
சந்தித்த நேரம் முதல், ஜான்சி உட்பட நட்பு வட்டாரமே கலகலப்பான உரையாடலில் மூழ்கி இருந்தது. ஆனால் ராஜாவால் ஏனோ சகஜமாக பேச முடியவில்லை. மனதிற்குள்ளேயே தன் காதலை சொல்லவும் முடியாமல், சொன்னால் என்ன நினைப்பாளோ என தடுமாறிக் கொண்டு இருந்தான். அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த ராஜாவைப் பார்த்த ஜான்சிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ ஒரு குழப்பத்திலே இருப்பதை உணர்ந்தாள். ராஜாவிடம் அவன் குழப்பத்தின் காரணத்தை விசாரித்தாள். அவனும் அப்படி ஏதும் இல்லை என சமாளிக்க முயன்றான். “என்கிட்ட கூட சொல்ல மாட்டியா ராஜா?” என உரிமையுடன் கேட்பதை பார்த்த ராஜா பூரித்துப் போனான். “வேணும்னா தனியா போய் பேசிட்டு வா டா” என்று காதலை சொல்ல வழி அமைத்துக் கொடுத்தான் பிரகாஷ்.
அந்த தனிமை சூழல் அவன் மௌனத்தை சற்றுக் கலைத்தது. பேச முயற்சித்து ஏதேதோ உளறினான். “ஏதாவது பிரச்சனையா?” என ஜான்சி வினவ ஏதும் இல்லையென மழுப்பினான். மனதிற்கும், வாயிற்கும் நடுவில் பெரிய போராட்டமே நடத்தினான். தன் காதலை தவிர மற்ற அனைத்து விஷயங்களையும் பேசி அந்த சூழ்நிலையை சமாளித்தான். அங்கிருந்து கிளம்பும் வரை எத்தனை முறை முயற்சி செய்தும் தன் காதலை அவனால் சொல்ல இயலவில்லை. அன்று இரவே அவன் ஊருக்கு கிளம்புவதாக ஜான்சியிடம் கூற, அவளும் “ எத்தனை மணிக்கு ரயில்?” என வினவினாள். ராஜா கிண்டலாக “ஏன் சென்ட் ஆஃப் பண்ண வருவியா?” என்றான். ஜான்சியும் “ ஒய் நாட் “ என்று உடனே சம்மதித்தாள். கிளம்பும் வரையாவது தன் காதலியுடன் இருப்பதை எண்ணி மகிழ்ந்தான் ராஜா.
அங்கிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் பிரகாஷ் ராஜாவிடம், “லவ் பண்றேனு சொல்லிடியா டா?” என்று கேட்க,"இல்லை டா மச்சான்” என்றான் ராஜா. “ நீ வேஸ்ட் டா. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனா கூட சொல்ல மாட்ட நீ” என்று திட்டினான். “ உனக்கு என்னடா தெரியும். எங்க ஏன் காதலை சொல்லி இருக்குற ஃபிரண்ட்ஷிப்பயும் இழந்திருவேனோனு பயமா இருக்கு மச்சான். எங்க அவ என்கிட்ட பேசாம மாட்டாலோனு பயமா இருக்கு டா. அவ இல்லாத ஒரு லைஃப் அ நினைச்சு பாக்க முடியலை மச்சி” என்று புலம்பினான். “அதுக்கு தான் மாப்பிளை சொல்லுறேன். சீக்கிரம் உன் காதலை சொல்லிடு. அவங்க வீட்ல கல்யாண பேச்சு எடுக்குறதுக்குள்ள நீ உன் லவ் வ சொல்லிடு. சொல்லாம விட்டுட்டு அப்புறம் புலம்பாத. அவளுக்கும் உன்னை பிடிச்சுருக்கு டா. மறுக்க மாட்டனு நம்பு”. என்று ஆறுதல் கூறினான் பிரகாஷ். “சீக்கிரமே சொல்லிறேன் டா” என்றான் ராஜா.
ரயில் புறப்பட அரை மணி நேரமே இருந்த நிலையில் அவர்கள் ரயில் நிலையத்தை அடைந்தனர். ரயிலில் படிப்பதற்கென ஒரு வார இதழை வாங்கிக் கொண்டான். தன் நண்பர்கள் அனைவருக்கும் “பாய்” சொல்லிவிட்டு, ஜான்சியின் பக்கம் நகர்ந்தான். “இந்த 2 நாள் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். காலேஜ் ல படிக்கும் போதே நாம ஏன் பழகலனு தோணுச்சு ஜானு!” என்றான் ராஜா. தன் அழகிய கண்கள் அகல விரிந்தபடி “என்னது ஜானு வா!” என்றாள். “ஆமா உன்னை அப்பிடி கூப்பிட கூடாதா. எனக்கு அப்பிடி கூப்பிட பிடிச்சுருக்கு. அப்பிடி தான் கூப்பிடுவேன்” என்றான் உரிமையுடன். அவள் புன்னகையுடன் “எனக்கும் இந்த 2 நாள் போனதே தெரியலை. உன்கூட டைம் ஸ்பெண்ட் பன்னது ரொம்ப பிடிச்சது ராஜா” என்றாள்.”அடுத்து எப்போ மீட் பண்ணலாம்?” என்று கேட்க, “நீ அடுத்த முறை சென்னை வரும் போது” என்று கூறினாள். ரயில் புறப்பட சில நிமிடமே இருக்க, ஜான்சி ராஜாவின் கைகளை பிடித்து ‘நைஸ் டூ மீட் யு” என்றாள். காதலி தன் கரங்களை பற்றிய மகிழ்ச்சியில் சிறகடித்து பறந்தான் ராஜா Love Love Love .

        விடாது தொடரும்..
 

No comments:

Post a Comment