விடாது காதல் பாகம் 4

விடாது காதல் பாகம் 4

            

                     வினோத் தான் அவனை அழைத்தது. “என்ன டா ஆச்சு? பதில் எதுவும் வந்ததா” என ஆவலுடன் வினவினான். “இல்லை டா. இப்போ என்ன பண்ணலாம்?” என்றான் ராஜா. “4 வருஷமா பேசாம இருந்த உனக்கு 4 நாள் வெயிட் பண்ண முடியாதா? பொறுமையா இரு டா. யு‌ஜி ஃபிரண்ட்ஸ் ல பசங்ககிட்ட அவங்களோட நம்பர் கண்டிப்பா இருக்கும் டா. அவங்ககிட்ட நம்பர் வாங்கி பேசுறது பொதுவா பொண்ணுங்களுக்கு பிடிக்காது. அதுனால அவங்களே உன்னை காண்டாக்ட் பண்ற வரை வெயிட் பண்ணு” னு வினோத் கூற “கண்டிப்பா காண்டாக்ட் பண்ணுவாளா?” என்று வினவினான் ராஜா. “அடடடா!!! உன் இம்சை தாங்கலை பா. இதுக்கு தான் டா காற்றுள்ள போதே தூற்றிக்கொள் னு பழமொழி எல்லாம் சொல்லியிருக்காங்க.” என்று நக்கலடித்தான்.
1 வாரம் கடந்து விட்டது. அவளின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன் பின் நண்பன் ஒருவன் உதவியினால் ஜான்சியின் அலைபேசி எண் அவனுக்கு கிடைத்தது. சற்றும் தாமதிக்காமல் அவளை உடனே அழைத்தான். மறுமுனையில் அவள் “ ஹலோ” என்று கூற, அவளின் குரலை கேட்ட அவன் பேசமுடியாமல் மெய்சிலிர்த்து நின்றான். 2, 3 முறை “ஹலோ, யாரு?” என்று கேட்ட அவள் எரிச்சல் அடைந்தாள். அப்போது நினைவுக்கு திரும்பிய அவன் “ஹலோ” என்று கூற, “யாரு நீங்க? கால் பண்ணினா பேசமாட்டீங்களா?” என்று வினவினாள் ஜான்சி.
“என் பேர் ராஜா. என்னை ஞாபகம் இருக்கா? கவிதாவோட ஃப்ரெண்ட்.” என்றான். “கவிதாவோட ஃப்ரெண்ட்டா இருந்தா அவளுக்கு கால் பண்ணுங்க. அப்பவே மெசேஜ் பண்ணுனேனே. இந்த விஷயத்துல அவ இஷ்டம் இல்லாம என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. அவ விஷயமா என்னை காண்டாக்ட் பண்றது வேஸ்ட். சாரி.” என்று கூறி அவனை பேசவே விடாமல் இணைப்பை துண்டித்தாள்.
ராஜா அவளை திரும்ப அழைத்தான். “இப்போ எதுக்கு திரும்ப கால் பண்ணுறீங்க?” என்றாள் எரிச்சலாக. “கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு. நான் கவிதாகிட்ட பேசணும்னு உனக்கு கால் பண்ணலை. உன்கிட்ட பேச தான் கால் பண்ணுனேன்” என்றான். “என்கிட்டயா? என்கிட்ட பேச என்ன இருக்கு? நம்ம 2 பேருக்கும் தான் பழக்கமே இல்லையே என்றாள் அவள். “காலேஜ் படிக்கும் போதே உன்கிட்ட பேசணும்னு நினைச்சுருக்கேன். ஆனா உன்கிட்ட ஏனோ பேசவே முடியலை. இப்போ நான் உன்கிட்ட பழகுறதுக்கும் கவிதாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நாம என் இப்போ பேசி பழக கூடாது.!! ஃப்ரீ யா இருக்கும் போது மெசேஜ் பண்ணு. கால் பண்ணு. நானும் பண்ணுறேன். ஓகே? என்றான் உரிமையுடன்..
முதலில் அவள் தயங்கினாலும் பிறகு சரி என ஒத்துக்கொண்டாள். அப்போது தான் அவள் அண்ணா யூனிவர்சிட்டியில் முதுநிலை பட்டபடிப்பு படிப்பதை அறிந்துக்கொண்டான். வீட்டில் ஒரே செல்லமகள் ஜான்சி. பெற்றோரின் ஒரே கனவு, எதிர்காலம் ஜான்சி மட்டுமே. இளநிலை பட்டபடிப்பை முடித்ததில் இருந்து அவளுக்கு பல வரன்கள் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவள் படிப்பு முடிந்த பின் தான் கல்யாணம் பற்றி யோசிக்க வேண்டும் என முடிவுடன் இருந்தனர் அவள் பெற்றோர்.
இருவரின் பழக்கமும் அதிகரித்தது. வகுப்பில் நடந்த சிறு விஷயம் தொடங்கி, பெரிய பிரச்சனைகள் வரை அனைத்தையும் ராஜாவிடமே பகிர்ந்தாள். அது அவனுக்கு மிகவும் பிடித்தது. ராஜா சந்தோசத்தோடும், தன் காதலை சொல்லும் ஆர்வத்தோடும் காத்திருந்தான். அவளால் தன் காதலை மறுக்க முடியாது என உறுதியாக நம்பினான். தன் காதலியை சந்திக்கும் ஆர்வத்தில் இருந்த அவனுக்கு சரியான நேரத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவன் வீட்டில் புதுமனை புகுவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. நண்பர்களுக்கு அழைப்பிதள் கொடுக்க செல்கிறேன் என்ற பெயரில் சென்னைக்கு ரயில் ஏறினான் ராஜா.
‍‍‍விடாது தொடரும்.

No comments:

Post a Comment