விடாது காதல்

 விடாது காதல்

 

          ராஜா பார்ப்பதற்கு மிக அழகானவன் இல்லை என்றாலும் ஆண்களுக்கே உரிய நடை, உடை, பாவனைகளில் அனைவரையும் வசீகரிக்கும் திறமை உள்ளவன். தனது இரு சக்கர மோட்டார் வண்டியில் கருப்பு நிற கண்ணாடி அணிந்து செல்லும் அழகே தனி தான்.
தனது இறுதி ஆண்டு முதுநிலை பட்ட படிப்பினை படித்துக் கொண்டிருந்தான். என்ன தான் ஏரியாவின் ரோமியோவாக இருந்தாலும் தன் தங்கையை சுற்றும் மற்ற சில ரோமியோக்களுக்கு வில்லனாகவே இருந்தான். கிழக்கு சீமையிலே விஜயகுமாரையே அண்ணன் தங்கை பாசத்தில் மிஞ்சுபவன். அப்பா அம்மா மீது மிகுந்த மரியாதை கொண்டவன். கல்லூரியில் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாகவே இருந்தான்.
ஆம்!! நீங்கள் நினைப்பது சரி தான். பேராசிரியரின் சில பல அர்ச்சனைகளை வாங்கிக் கொண்டு வகுப்பிற்கு வெளியில் நிற்க்கும் மாணவனாகவே இருந்தான். இவனை போலவே அவுட்ஸ்டாண்டிங் மாணவர்களாக இருக்கும் நால்வரே இவனது நண்பர்கள். அவர்களில் ஒருவனான வினோத் இவனுடைய நெருங்கிய தோழன். இருவர் இடையேயும் ஒளிவு மறைவு என்பதே இல்லை. இந்த நண்பர்கள் கூட்டம் எங்கே இருந்தாலும் கேலி, கிண்டல் என்று பொழுது போவதே தெரியாமல் அரட்டை அடித்து கொண்டிருப்பர். வகுப்பில் மட்டுமே இவர்கள் அனைவரும் அவுட்ஸ்டாண்டிங். மற்றபடி மேனேஜ்மெண்ட் மாணவர்களுக்கான அனைத்து திறமையும் உள்ளவர்கள். கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் அனைத்திலும் பங்கு பெற்று இவர்கள் அணியே முதல் இடத்தை தட்டி செல்லும். இப்படியே முதல் ஆண்டு படிப்பை முடித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர்.
கல்லூரி படிப்பின் போது பலருக்கு ஏற்படும் அனுபவமே காதல். சில காதல் கல்யாணம் வரை கூட்டி செல்லும். சில காதல் கல்லூரியின் போதே சூழ்நிலை காரணங்களால் பிரிந்து விடும். இப்படி பட்ட காதல் இவர்கள் அணியிலும் இருந்தது. நம் கதையின் நாயகன் ராஜாவை தவிர அவன் நண்பர்கள் அனைவருக்கும் காதலி இருந்தார்கள். வழக்கம் போல ஒரு நாள் இவர்கள் கூட்டம் கும்மாளம் அடித்து கொண்டிருக்கும் போது ராஜாவிடம் “நீ மட்டும் ஏன் டா காதலிக்கவில்லை?” என்று கேட்க அவனிடம் பதில் இல்லை அதற்கு.
பெண்கள் என்றால் பிடிக்காதவன் இல்லை ராஜா. எனினும் காதல் அவன் வாழ்வில் வரவில்லை. நண்பர்கள் காதல் என்று கேட்ட உடன் அவன் நினைவில் ஒரு முகம் தோன்றி மறைந்தது. வீட்டிற்கு செல்லும் வரை அதை பற்றியே யோசித்து கொண்டிருந்த அவன் சமூக வலை தளத்தில் அந்த முகத்தை தேடுகிறான்.
அவனுக்கு அவள் பெயர் மட்டுமே தெரியும். ஆனால் அவளிடம் பேசியதே இல்லை.
கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத ஒரு பொண்ணை எதற்கோ யாருக்காகவோ தேடுகிறான்????

No comments:

Post a Comment