Showing posts with label cinema news. Show all posts
Showing posts with label cinema news. Show all posts

Friday, August 9, 2013

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! 

ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.


இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.

“”என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள்.


எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை.

திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம்.




ஹாஸ்டலுடன் சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல் வார்டன் சீதாபதி எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்… “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.


பையனைத் தேடி அலைஞ்சு திரிஞ்சு சலிச்சுட்டோம். இடையில் ஒரு நாள், தனுஷ் சன்.டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்தாப்ல. நான் மதுரைக்காரன் என்றும், மதுரை பக்கத்தில மேலூரை சேர்ந்தவன் என்றும்… “என்னடா.. இவனுக்கு தேனிதானே சொந்த ஊரு, அப்புறம் ஏன் மேலூர் என சொல்றான்?’ என சந்தேகம் வர… அக்கம், பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலைதான் தனுஷ் என சொல்ல ஆரம்பிச்சாங்க. அதற்கப்புறம் தான் கலையோட போட்டோ எல்லாம் தேடிப் பிடிச்சு, ஒத்துவைச்சுப் பார்த்தால்… உண்மை எனக்கு தெரிஞ்சது. பிறகுதான் என் கலையை மீட்காமல் விடுவதில்லை எனப் போராடிக் கொண்டிருக்கிறேன்.




ஏன் சார்… என்னையப் பாருங்க. என் முகச்சாயல்தானே அவனுக்கு. இடையில் நான் வேலை பார்க்கிற சிவகங்கை பஸ்-ஸ்டாண்டில் “வேங்கை’ படம் சூட்டிங் நடத்தினாங்க. அப்ப நான் இல்லை. ஆனால், டிரைவர் ஆபிரகாம் நேராக தனுஷ்கிட்ட போய், “உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு’ என சொல்லியிருக்காரு. “ஏன் கஷ்டப்படணும். என்னை வந்துப் பார்க்கச் சொல்லுங்க…”னு சொல்லிட்டு ஷூட்டிங் போயிட்டான் கலை. நான் இருக்கிற ஊர்ல, வேலை பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று. அதை நிரூபிக்க போராடிக்கிட்டு வருகிறேன். சி.எம். செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன். விசாரிக்க சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொன்னாங்க.


டெய்லி அலைந்தேன். அப்புறம் “பெரிய இடத்து விவகாரம்’ என சொல்லிட்டாங்க.

அதற்குப் பிறகு எங்க ஊரு நடிகர் கஞ்சா கருப்புகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவரும் “இதிலே நான் தலையிடமுடியாது’ எனக்கூறி ஒதுங்கிகிட்டார். என் மகள் கல்யாணத்திற்குப் பத்திரிகை அனுப்பிக் கூட அவன் வரலைங்க. அவன் சம்பாதிப்பதில் சல்லிக் காசு கூட எங்களுக்கு வேண்டாம். என் மகன் தானென்று தனுஷ் சொன்னாப் போதும். அதை நிரூபிப்பதற்கான எந்த டெஸ்ட்டிற்கும் நான் தயாராய் இருக்கேன்” என கண்ணீர் வடித்தார் கதிரேசன்.

தனுஷ் படங்களையும், தன் மகன் கலைச்செல்வனின் படங்களையும் ஒத்து வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார் கலையின் தாய் மீனாள். “”உறுதியாய் சொல்றேன்… கலைச் செல்வன்தான் தனுஷ். பெத்தவளுக்குத் தெரியாதா, பிள்ளை யாரென்று..? கொட்டக்குடிப் பக்கத்தில “ஆடுகளம்’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தப்ப நாங்களும் அங்கே போனோம். தனுஷ் சேவல் விட்டுக்கிட்டிருந்தான். நான் கலை, கலைன்னு கத்தினேன். மைக் வச்சு அவங்க கத்தினதால் அவனுக்கு கேட்கலை போல. தனுஷ் யாருக்காகப் பயந்துக்கிட்டு இருக்கான் எனத் தெரியவில்லை? இந்த பிரச்சினை அவனுக்கு நல்லாவே தெரியும்..! வெளியில் வந்து உண்மையை சொன்னால் போதும். மற்றபடி எந்த சொத்து சுகத்துக்கும் நாங்க ஆசைப் படலை” என்றார் தாய் மீனாள்.


இது ஒரு புறமிருக்க முன்னதாக, தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தின் போது, “”எங்களது பிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள்” என மதுரை தவிட்டுசந்தையை சேர்ந்த முருகபாண்டி, பூமி ஆகிய இருவர் கஸ்தூரி ராஜாவை வற் புறுத்த, அவரோ… “5 லட்சம் கேட்டு தன்னை மிரட்டுகிறார்கள்’ என வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்ய… இருவரும் காவல்துறையினரால் மிரட்டப் பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரிலிருந்து கடத்தப்பட்ட கலைச்செல்வன்… குழந்தைத் தொழிலாளியாக கஸ்தூரி ராஜாவிடம் விடப்பட… அவரோ, தன்னுடைய “துள்ளுவதோ இளமை’ படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர் வராததால் அந்த படத்தினில் கலைச்செல்வனை தனுஷாக அறிமுகப்படுத்தினார் என்றும், தொடர்ந்து திரையுலகில் தனுஷ் பிரகாசிக்க, அப்பொழுதுதான் குழந்தைத் தொழிலாளியாக விடப்பட்ட கலையைக் கேட்டு கஸ்தூரி ராஜா வை மிரட்டியுள்ளனர் மதுரை வாசிகள் என்றொரு தகவல் கோடம்பாக்கம் ஏரியாவில் இன்றுவரை கிசுகிசுக்கப்படுவதும் உண்டு. திருப்பத்தூரில் கலைச் செல்வன் காணாமல் போன தாகப் பதியப்பட்ட வழக்கு இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது.


தனுஷை சுற்றும் இந்த சர்ச்சைகளுக்கு அவரின் வார்த் தைகள்தான் முற்றுப்புள்ளியே!


courtesy:tamilspace

Monday, March 18, 2013

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது

The 60th National Awards have been announced and Irrfan Khan won Best Actor for his performance in Paan Singh Tomar, which also won Best Hindi Feature Film. Rajamouli's graphical extravaganza Eega won National awards in the category of 'Best Special Effects' and 'Best Regional Film in Telugu'. The National Film Awards, initiated to honour those who work in the Indian Cinema is given away every year. 


National Awards winners list

Best Actor: Vikram Gokhale for Marathi film Anumati 

Supporting Actress: Dolly Ahluwalia for Vicky Donor 

Special Effects: Eega
Costume Designer: Poornima for Paradesi 

Best Background Score: Kaliyachan 



Best Telugu Film: Eega 



Best sound recording: Gangs of Wasseypur 



Best choreography & art direction: Vishwaroopam 



Best Feature Film: Paan Singh Tomaar 



Indira Gandhi award for debut director: Chittagong 



Best popular film for wholesome entertainment: Vicky Donor and Usthaad hotel 



Best film on social issues: Malayalam film Spirit 



Best Film on environment: Malayalam film Black Forest 



Special Jury Award: Rituparno Ghosh, Nawazuddin Siddiqui 



Best Actor: Irrfan Khan, Paan Singh Tomar 



Best supporting actor: Annu Kapoor, vicky donor 



Best Female playback singer: Shankar Mahadeven, Chittagong 



Best Dialogues: Anjali Menon, Usthaad Hotel 



Best Adapted Screenplay: OMG 



Best Screenplay Writer: Sujoy Ghosh for Kahaani 



Best Editing: Kahaani 



Best makeup artist: Raja for Vazahkku En 18/9 



Best Lyrics: Prasoon Joshi for Chittagong 



Thilakan for Usthaad Hotel 



Special Mention: Parineeti Chopra wins for Ishaqzade 



Best Tamil Film: Vazhakku Enn 



Best Non-Feature Film: Shepherd's of Paradise 



Best Non-Feature Film: Shepherd's of Paradise 



Feature Film Awards follow 



Best Non-Feature Film: Shepherd's of Paradise 



Best Biographical Historical reconstruction: Celluloid Man 



Best Film on Agriculture: Timbucktoo 



Best Social Film: Behind the mist 



Best Adventure Film: Manipuri Pony 



Best Investigative Film: Inshallah Kashmir 

Thursday, February 7, 2013

சர்ச்சைகளை மீறி அசத்தும் விஸ்வரூபம்... கமல் நடிப்புக்கு ஒரு சபாஷ்...


 
விஸ்வரூபம் படத்தில், சர்ச்சைகளை கொஞ்சம் மறந்துவிட்டு பார்த்தால், கமலின் புதிய பரிமாணம் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. 
 
ஒரு இயக்குநராக ஹேராமிலேயே தனது 'க்ளாஸ்'ஐ நிரூபித்துவிட்டவர் கமல். அவரது நடிப்புக்கு புதிதாக சான்றிதழ் தேவையில்லைதான். ஆனால் விஸ்வரூபத்தில் அந்த கதக் கலைஞராக வரும் முதல் 30 நிமிடங்களைப் பார்க்கும் எந்த சக கலைஞரும் கமலை நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவு மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் கமல். 
 
குறிப்பாக 'உன்னைக் காணாத..' பாடலின் வரிகளுக்கு, இசைக்கு கமல் தரும் பாவங்கள் இருக்கிறதே.. அந்த கதக் மாஸ்டரே எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டியதாக வந்த செய்திகளில் கொஞ்சமும் மிகையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
 
கமல்ஹாஸன் நடையை எத்தனையோ படங்களில், எத்தனையோ விதங்களில் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க வீதிகளில் ஒரு நடனப் பெண்ணின் நளினத்தோடு நடந்து செல்வார் பாருங்கள்... ஏபிசி என அத்தனை க்ளாஸ் ரசிகர்களின் அப்ளாஸ்களையும் அள்ளும் நடிப்பு அது. 
 
முதல் 30 நிமிடங்கள் ஒரு நாட்டியக் கலைஞனாகவே மாறிவிட்டார் கமல். போனை எடுக்க வரும்போது ஒரு நடை நடக்கிறார், சாலையில் ஓடும்போது, பேசும்போது காட்டும் முகபாவம், குரல், விரல்களால் முடியைக் கோதும்போது, கண்களில் நளினம் காட்டும்போது என மிக நுண்ணியமான விஷயங்களில் மிக மிக பிரயாசைப்பட்டு தனக்கு நிகர் ஒரு நடிகன் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 
 
அதே போல நாட்டியக் கலைஞன் என்ற மறைப்பிலிருந்து அவர் உண்மையிலேயே யார் என்பதை வெளிக்காட்டும் சூழல், அதை அவர் உணர்த்தும் விதம்... நடிப்புக்கு தனி இலக்கணமே சொல்கிறது. மென்மை நடிப்பு மட்டுமல்ல... மிரளவைக்கும் ஆக்ஷனிலும் தனது நடிப்பு உலகத் தரம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கமல். 
 
ஜேம்ஸ்பாண்ட், இங்கிலாந்து துப்பறியும் நிபுணர் போல... இந்திய சினிமாவுக்கு கமல் ஒரு உதாரண கேரக்டரை உருவாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல. 
 
இந்த விஸ்வரூபத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கமல் எனும் அற்புதமான நடிகனே என்பது ரசிகர்களின், விமர்சகர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு!

Wednesday, February 6, 2013

பாலிவுட் நடிகை பிரியங்காசோப்ராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை சீரியல் நடிகராம்!



                   பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா விரைவில் சீரியல் நடிகரை திருமண செய்ய இருக்கிறார். தமிழில் விஜய்யுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் பிறகு பாலிவுட்டுக்குச் சென்று பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அவருடன் ஹிந்திப்பட உலகில் பிரபல நடிகைகளாக வலம்வந்து கொண்டிருக்கும் சக நடிகைகள் கரீனா கபூர், வித்யாபாலனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு மார்க்கெட் சரியவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்கள்.
எனவே, பிரியங்கா சோப்ராவும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்துகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பிரியங்கா சோப்ராவின் சித்தி வரன் பார்க்க தொடங்கியுள்ளார். நிறைய மாப்பிள்ளைகளை பார்த்திருக்கிறார். அந்த மாப்பிள்ளைகளில் ஒருவர் மொகித் ரெய்னா. இவர் ஹிந்தியில் பிரபலமான டி.வி. நடிகர் ஆவார். இவரை தெரியாத ஹிந்தி ரசிகர்களே இல்லை. புராண தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருக்கு மொகித் ரெய்னாவை பிடித்துள்ளதாம். பிரியங்கா சோப்ராவுக்கும் விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.

Monday, February 4, 2013

கடல் படம் குறித்த சர்ச்சைகள்

Issue over kadal film:
 

*opening seen hero presavam pathutu vararu.. some one asking why blood in hand.. hero saying it is jesus blood..
*one boy urinating in chruch...
*climax portrayted as villan defeating father.. and father saying that villan wins

this was the issues against kadal film....
lets wait and see wat happening....

Wednesday, January 30, 2013

கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் - இது கமல் ரசிகர்கள்

 
மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கமல் ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் அழகர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் தலைவர் கமல்ஹாசன் எந்த மதத்தையும் சேராதவர். எங்கள் நற்பணி மன்றத்தில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும், எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர். கமல்ஹாசன் அதிக செலவில் விஸ்வருபம் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து பின்னர் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். எங்கள் தலைவர் எங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது கிடையாது. எங்கள் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவிதான் செய்து வருகிறோம். இன்று நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியுள்ளார். தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம். அவரது உத்தரவுக்காக பொறுமை காத்து கொண்டு வருகிறோம். அவர் கட்டளையிட்டால், களம் இறங்க தயார்," என்றனர்.

விஸ்வரூபம் மீதான தடை நீட்டிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்



சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீட்டிப்பை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம்!



சென்னை: விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல் ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், எனது முஸ்லீம் குடும்ப நண்பர்கள் என்னை அணுகி பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றனர். விஸ்வரூபம் படப் பிரச்சனை குறித்து என்னிடம் பேசினர். இந்த பிரச்சனையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர். படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் அளித்தனர். இதற்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருந்து சில வாசகங்களை படத்தில் நான் பயன்படுத்தியுள்ளது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதனால் இறைமறை வசனங்களை நீக்குவது என்று தீர்மானித்துள்ளேன். சில காட்சிகளையும் எடிட் செய்ய உள்ளேன். இந்தப் படப் பிரச்சனைகளால் சில விரும்பத்தாக சம்பவங்கள் நடந்து வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. என் சகோதர்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார். கமலின் இந்த அறிவிப்பு குறித்து 24 இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆருண் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால், விஸ்வரூபத்துக்கு இஸ்லாமியர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு அகலலாம். ஆனால், அரசின் எதிர்ப்பு அகலுமா என்பது தெரியவில்லை.

நண்பன் கமலுக்கு கைகொடுக்க வருகிறார் ரஜினி?



சென்னை: கமல்ஹாஸனுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையை சரிப்படுத்த தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ரஜினி. அரசின் உக்கிரத்தைத் தணிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக உள்ளதாக போயஸ் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமா இதுவரை பார்க்காத பரபரப்புக்கும் உள்ளாகியுள்ளது. அரசு இதுவரை இல்லாத அளவு உக்கிரத்துடன் விஸ்வரூபத்தை எதிர்கொண்டுள்ளது. விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கி வெளியான தீர்ப்பை, அரசுக்குக் கிடைத்த தோல்வியாக எடுத்துக் கொண்டுவிட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்குக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தீர்ப்பு வெளியாகி இவ்வளவு நேரமாகியும் படத்தை எங்கும் திரையிட முடியவில்லை. காலை 6 மணியிலிருந்து இந்தப் படத்தைப் பார்க்க பல ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து, பார்க்க முடியாமல் திரும்புகின்றனர்.  
அரசின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற மனநிலையில் இன்று முழுவதும் படத்தை வெளியிடாமல் நிறுத்திவைக்கும் முடிவில் உள்ளனர் திரையரங்க உரிமையாளர்களும். நடப்பது அனைத்தையும் பார்த்த கமல்ஹாஸன், தமிழகத்திலிருந்தே வெளியேறி விடுவதாகக் கூறியுள்ளார். கமலுக்கு பிரச்சினை என்றதும் முதலில் குரல் கொடுத்த திரையுலக பிரமுகர் என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான். என்னுடைய 40 ஆண்டுகால நண்பரின் நிலை கண்டு மனம் கலங்குகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இஸ்லாமியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், கமலுக்கு மேலும் மேலும் பெருகும் நெருக்கடியைக் கண்டு மனம் பதறியுள்ள ரஜினி, அவரை இக்கட்டிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்துத் தரப்பிலும் பேசி இணக்கமான சூழலை அவர் உருவாக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு 'அந்தப் பேச்சு' காரணமா?

சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது. அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்... நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. Is These The Reasons Tn Govt Opposition To Kamal அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில், உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது. எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும், சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல். அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார். இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி. கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை!!



 
 
 
            சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலமையிலான குழு காலை 10.30- மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ் தலைமையிலான பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் தடையை நீக்கத்துக்கு தடை விதிக்கவில்லை. எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட்டே தீர வேண்டிய கட்டாயம் தியேட்டர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அரசின் விருப்பத்துக்கு மாறாக இந்தப் படத்தை தயக்கத்துடன் வெளியிட்டுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். பிற்பகல் விசாரணையின் போது படத்துக்கு தடை விதிக்கப்பட்டால், உடனடியாக படத்தை நிறுத்திவிடுவதாக தியேட்டர்கள் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு, படத்தை திரையிட்டுள்ளனராம்.

விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய முஸ்லீம் சங்கத்தை ரூ.100 கோடி கோர்டில் டெப்பாசிட் செய்ய கோரிக்கை!

FLASH NEWS-
The Honourable Judge of the Madras High Court has pointed out that the film has no scenes that hurt the Muslim community and that Muslim leaders in other states have raised no objections so far.

In such circumstances, he has raised a pertinent point to the petitioners as to why they feel ban is justified. And the judge has ordered the protesters to deposit Rs.100 Crores to counter the loss of the movie!
----------------------------------------------------------------------
விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய முஸ்லீம் சங்கத்தை ரூ.100 கோடி கோர்டில் டெப்பாசிட் செய்ய கோரிக்கை!
-நீதிபதி வெங்கட்ராமன்.

#தர்மத்தின் வாழ்வு தன்னை சூதுகவ்வும்..
இறுதியில் தர்மமே வெல்லும்...!!

# Truth Always prevail!

Friday, January 25, 2013

அமெரிக்காவில் களைகட்டும் விஸ்வரூபம் திரைப்படம்

தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ள விஸ்வரூபம் படத்துக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உலகின் மேற்கு கோடியில் வெளியாகியுள்ள தமிழ்ப் படத்திற்கு, நாயகன் கமல் ப்ரமோட் செய்கிறார்.

ஆனால் உலகின் பல பகுதிகளிலும் வெளியாகிய விஸ்வரூபம் தமிழகம், புதுவை மற்றும் பெங்களூரில் வெளியாகவில்லை. இது தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய விவகாரமாகும். அமெரிக்காவில் கிழக்கே நியூயார்க் முதல் மேற்கே லாஸ் ஏஞ்சல்ஸ் வரை அனைத்து பெரும் நகரங்களிலும் வியாழக்கிழமை இரவே சிறப்புக் காட்சிகள் நடந்துள்ளன. கலிஃபோர்னியா சிறப்புக் காட்சிகள் இன்னும் முடியவில்லை.

கமல் ஹாசன், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஓசே மற்றும் ஃப்ரீமாண்ட் நகரங்களில் நேரடியாக ரசிகர்களை சந்திக்கிறார். அனைத்து காட்சிகளுக்கும் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

ஏனைய நகரங்களிலும் சிறப்புக் காட்சிகள் ஹவுஸ் புல்லாகியுள்ளது. தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது ஆனால் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது என்ற செய்தி, அமெரிக்காவில் தமிழ் தெலுங்கு, இந்தி பேசும் மக்களிடையே பெரும் ஆவலை தூண்டிவிட்டுள்ளது.

தடை செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்ற ஆவலே, பெரும் விளம்பரமாகிவிட்ட்து.

Saturday, January 12, 2013

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் Alex pandian movie review





படத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை நையப்புடைக்கும் கார்த்தி. 30-40 பேரை அடிக்கிறார். தாவி தாவி உதைக்கிறார். குறுக்கால போய் ட்ரெயின புடிக்க ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. மறுபடி ஒரு 20பேர அடிக்கிறார்.
அப்புறம் ஒரு பாலத்துக்கு கீழ ட்ரெயின் போயிட்டு இருக்கப்ப பாலத்துக்கு மேலே கார்த்தி நிக்கிறார்((அப்ப மிஸ் ஆச்சுல்ல அதே ட்ரெயின்.. இவரு பைட்டு முடிச்சுட்டு வரட்டும்னு ட்ரெயின் ட்ரைவர் ஓரமா நிப்பாட்டிட்டு ஒரு டீ சாப்பிட்டிருப்பார் போல). ட்ரெயின் மீது குதித்து இன்னும் ஒரு 10 பேரை தாவி உதைத்து, கொஞ்ச நாளாய் தமிழ் சினிமாவில் காணமல் போயிருந்த ரயில் பெட்டிக்கு மேலே நடக்கும் சண்டையை மீண்டும் போட்டு கதாநாயகியைக் காப்பாற்றுகிறார்.
கட் பண்ணீங்கண்ணா சந்தானத்தோட வீடு. அவருக்கு அழகான 3 தங்கச்சிங்க(நிகிதா, சனுஷா, அப்புறம் யாரு சார் அந்த அழகான புதுப்பொண்ணு?). வீட்டுக்குள் உள்ளே படுத்திருக்கிறார் கார்த்தி. அந்த 3 தங்கைகளும் கார்த்தி மீது லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விடுகிறார்கள். மாராப்பை விலக்கியபடி தான் பேசுகிறார்கள். கேரம் போர்டு விளையாடும் போது இந்த காய அடி மாமா என அப்பாவியாய் பேசுகிறார்கள். நெஞ்சோடு நெஞ்சு இடிப்பதை விளையாட்டு என நினைத்து விளையாடுகிறார்கள். அவர்களை குனிய வைத்து இடுப்பை பிடித்து தாவ முயலுகிறார். இப்படி இன்னும் சில விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். எல்லா விளையாட்டிலும் அந்த 3 தங்கைகளும் சேலை விலகிய மார்போடும், இடுப்போடும் அடக்கமாய் இருக்க, அந்த தங்கைகளை காப்பாற்ற போராடுகிறார் சந்தானம். போதாதுக்கு அவரது அம்மா காரக்டரையும் இழுக்கும் இரட்டை அர்த்த டயலாக்குகள். அது என்ன வீடா இல்ல சிலுக்கூர்பேட்டை ப்ராத்தல் ஏரியாவான்னு நமக்கு கொஞ்சமல்ல நிறையவே சந்தேகம் வரும். இதுக்கிடையில இந்த 3 பேரேட சேர்ந்து ஆடுற பாடல்.. அப்புறம் வயசுக்கு வந்ததைக் கொண்டாடும் இன்னொரு அர்த்தமுள்ள பாடல் வேற. இடையில ஆக்சன் படம்னு காமிக்க ஒரு சம்பந்தம் இல்லாம சண்டை வேற.

அப்புறமா இன்டர்வல் டைம்ல அனுஷ்கா மீண்டும் வர்றாங்க. இவரு சி.எம் பொண்ணு. இவர தேடி அலையுற குரூப்போட தலைவர் மிலிந்த் சோமன். ட்ராகுலா படத்துல வர்ற மாதிரி முழங்கால் அளவுக்கு ரெண்டு பக்கமும் காத்துல பறக்குற கோட் என்னேரமும் போட்டிருக்கிறார் . கூடவே நாலு,ஸ்கார்ப்பியோ, 40 கோட் போட்ட அடியாட்கள் என லாஜிக் மாறாமல். அவங்க மறுபடி கார்த்தி, அனுஷ்காவ கண்டுபிடிச்சு துரத்த காட்டுக்குள்ள போறாங்க.

ஒரு ஃப்ளாஸ்பாக் சொல்றாங்க. அது என்னன்னா... மாற்றான் மாதிரி அமெரிக்கால தடை செஞ்ச மருந்த இங்க விக்க வற்றாரு வில்லன். முதலமைச்சர் அனுமதி மறுக்குறாரு. வில்லன் உடனே ஒரு சாமியார் உதவியோட திட்டம் போட்டு சி.எம் பொண்ண கடத்த சொல்றாரு. கடத்துற ஆள்தான் கார்த்தி. கடத்தி காட்டுக்குள்ள போறாரு. அங்க ரெண்டு பேரும் ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ப்ரீயா திரியுறாங்க. இடையில காமெடி பண்றேன்னு மனோபாலாவை போட்டு கட்டிவச்சி மாறி மாறி அடிக்கிறாங்க. சி.எம்.பொண்ணு அனுஷ்கா அதுவரைக்கும் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. இவரு சறுக்கி விழுந்தப்ப கார்த்தி காப்பாத்த உடனே லவ்வு வந்துடுது. வில்லன்கிட்ட ஒப்படைக்க போறப்ப இது மக்களை பாதிக்கிற விசயம் இத நீ செய்யனுமான்னு அனுஷ்கா கேட்க உடனே கார்த்திக்கு ஞானோதயம் வந்து வில்லன்களோட சண்டை போட்டு அனுஷ்காவ காப்பாத்துறாரு.. அப்ப ஓடுனதுதான் பர்ஸ்ட் சீன்.
இப்போ ப்ளாஸ் பேக் முடிஞ்சாச்சா.. மறுபடி சந்தானத்தோட காட்டுக்குள்ள இன்னும் நாலு சுமாரான காமெடி.
முதல்வரோட பி.ஏ. பிரதாப் போத்தனும் இதுல உடந்தைன்னு சின்ன குழந்தை கூட யூகிக்ககூடிய டிவிஸ்ட ரொம்ப பெரிசா பில்டப் பண்ணி காமிக்க, மறுபடி வில்லன்களிடம் அனுஷ்காவும், கார்த்தியும் மாட்டிக்கொள்ள, மறுபடி அவர்களிடமிருந்து அனுஷ்காவை கார்த்தி எப்படி காப்பாத்துறார்ங்கிறது கிளைமாக்ஸ். எப்படி காப்பாத்துறார்?

அதுதான் படத்துலயே ரொம்ப ஹைலைட்.
கட்டிக்கிடக்கிற கார்த்திய வில்லன்கள் சுமனும், மிலிந்த் சோமனும் புட்பாலால் உதைத்து டார்ச்செர் செய்கின்றனர். (10-15 வருசம் முன்னாடி வந்த அர்ஜீன் படங்கள்ள சரண்ராஜ் மாதிரி வில்லன்கள் இப்படித்தான் கிரிக்கெட் பாட் வைச்சு, க்ளவுஸ், லெக்பேட்லாம் கட்டி, அர்ஜீனை கிரிக்கெட்பாலால அடிச்சு டார்செர் பண்ணுவார்) அப்ப, நீங்கல்லாம் ஆம்பளையா முடிஞ்சா அவரை அவுத்துவிட்டு அடிங்க என காலங்காலமாய் கதாநாயகிகள் க்ளைமாக்ஸில் சொல்லும் டயலாக்கை அனுஷ்காவும் மறக்காமல் சொல்ல அப்புறம் என்ன? அதை மட்டும் நீங்க வெள்ளித்திரையில் தான் கண்டுகளிக்கனும் சொல்லிப்புட்டேன் ஆமாம்.

சந்தானம் ஆரம்ப காலத்துல விஜய் டிவில அப்ப வந்த மொக்கை படங்களை கண்ணாபிண்ணான்னு கலாய்ச்சு பிரபலம் ஆனார். இப்ப அவரும் அதையெல்லாம் விட படு மொக்கையான படத்தில். பாவமாய் இருக்கிறது. அதிலும் 3 தங்கைகளை வைத்து நடக்கும் ஆபாசக்கூத்து. (by the way, படத்துக்கு யூ சர்ட்டிபிகேட்). இப்படி இன்னும் எத்தனை படங்களில் தான் ஹீரோக்களுக்கு தங்கைகளை வைத்து செட்டப் பண்ணும் அல்லது காப்பாற்றும் கதாபாத்திரத்தை தாங்கிப்பிடிப்பாரோ. இந்த கடுப்பில் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா போல ரூட் மாறிவிட்டார் போல.
கார்த்திக்கு சகுனியில் ஒரு சறுக்கல் அதையடுத்து என்ன மாதிரி படம் செய்து தன் மார்க்கெட்டை சரி செய்ய முயலுவார்னு ஒரு யோசணை இருந்தது.

நடிகர்கள் சாதாரணமாய் இருக்கும் போது நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். மாஸ் ஹீரோ என்ற பெயரும் மார்க்கெட்டும் வந்ததும் மாஸ் படம் என்ற பெயரில் மொக்கை கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். என்ன எழவு லாஜிக்கோ.
இப்பல்லாம் தெலுங்குப் படங்களே ரொம்ப மாடர்ன்னா, out of the box ஆயாச்சு. ஆனா இவங்க தமிழ்-தெலுங்கு இரு மொழியில எடுக்குறேன்னு 20 வருசத்துக்கு முன்னாடி வந்த தெலுங்குப்படங்களோட போட்டி போட்டு எடுத்துருக்காங்க.

சந்தானத்தின் சில டயலாக்குகள் சிரிக்க வைக்கின்றன. 'கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது',  'சிக்ஸ் பேக் இல்லாட்டியும் நல்ல ப்ளாஸ் பேக் வைச்சிருக்கே.' ரகத்தில். 
படத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விசயம். சண்டைக்காட்சிகள். முன்னெல்லாம் ரோப்புல கட்டி தூக்கி எடுத்த பைட்லாம் பார்த்தா காமெடியா இருக்கும். கால் படாமலே வெறும் சவுண்ட் குடுத்துட்டு 40 அடி தள்ளி போய் விழுவாங்க. சின்னபுள்ளத்தனமா ஏர்ல பறப்பாங்க. இடுப்புல ரோப் கட்டியிழுக்குறது அப்படியே தெரியும். இந்தப் படத்தில் ஒரு மசாலா பட சண்டைக்காட்சியாய் பார்க்கும் போது மிகச் சிறப்பாய் எடுத்துள்ளனர். நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள் கார்த்தியும் மற்ற அனைவரும். சண்டைகாட்சி இயக்குனர் யார் என்பது தெளிவாய் தெரியவில்லை. பாராட்டுக்குரியவர்.
இயக்குனர் சுராஜ் படங்களில் வழக்கமாய் காமெடி வொர்க்அவுட் ஆகும். தலைநகரம், மருதமலை போன்றவற்றின் வெற்றியை உறுதி செய்ததில் காமெடியின் பங்கு பெரியது. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்திலும் முதல் பாதி முழுவதும் கதைக்கு வேலையே வைக்காமல் காமெடி என்ற ஒன்றையே நம்பியிருக்கிறார். ஆனால் காமெடி தான் வராமல் ஏமாற்றிவிட்டது.
முதல் 15 நிமிடங்களில் காட்டிய வேகமும் விறுவிறுப்பும் அடுத்த 1 மணி நேரத்திற்கு காணமல் போனது, காமெடிக்காக கதையை கடைசி பெஞ்சுக்கு தள்ளியது, தெலுங்கு ஆடியன்ஸையும் கவர் பண்ண வேண்டும் என்பதற்காக பழைய தெலுங்கு பார்முலாவுக்குள் மாட்டிக்கொண்டது, கார்த்தியின் மீது அனுஷ்காவிற்கு காதல் வருவதற்கான சரியான காட்சிகளை அமைக்காதது, அனுஷ்காவின் காரக்டரை டெவலப் பண்ணாதது, சந்தானத்தின் 3 தங்கை கதாபாத்திரங்களை ஏதோ தப்பான இடத்தில் ஏனோ தானோவென அலையும் பென்களை போல சித்தரித்தது, ஒரு சி.எம் பெண்ணை கடத்திவந்தால் கடத்தியவனின் மனநிலை, கடத்தப்பட்ட பெண்ணின் மனநிலை இரு இரண்டையும் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் விளையாட்டுத்தனமாய் காட்சிகள் வைத்தது, வில்லன்களை ஸ்கார்ப்பியோ, கோட் சூட், கெக்கேபிக்கே சிரிப்பு, கெட்ட சேதி சொன்ன தன் ஆளை சுடும் லூசுதனம் தாண்டி டெவலப் பண்ணாதது, 6 பெரிய கார்களில் 10 பேர் மெஷின் கன்னால் விடாமல் ஆயிரக்கணக்கான குண்டுகள் பொழிய, 10அடி முன்னே ஒரு மாருதி வேனில் ஒரு முடி கூட உதிராமல், கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மூவரும் தப்பி வருவது, இப்படி ஏராளமான இடங்களில் இயக்குநர் சுராஜ் சறுக்கிவிட்டார்.
திரைக்கதை பலவீனமாய் போய்விட்டால் கார்த்தி போன்ற திறமையான நடிகர்களின் ஈடுபாடும், அனைத்து டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணாய்தான் போகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் பாடம் தான் இந்தப் படம்.
2012ல் தமிழ்சினிமாவில் நிறைய ஆரோக்கியமான படங்கள் வந்து வெற்றி பெற்றது. மசாலா-கமர்சியல்-பிரம்மாண்டம் என்ற பெயரில் வந்த மாற்றான்,பில்லா 2, தாண்டவம், சகுனி, முகமூடி போன்றவை காணாமல் போனது. 2013 ல் இது ரொம்ப சுமாரான ஸ்டார்ட். அதுவும் மாற்றானோடு ஒப்பிட்டால் இது இன்னும் பல படிகள் கீழே. 
பிஸினெஸாய் பார்க்கும் போது இன்றைக்கு ரிலீஸ் செய்தது செம லக் என்று தான் சொல்லவேண்டும், விஸ்வரூபம் கான்சல், வேறு எந்த படமும் போட்டிக்கு இல்லாமல் இரண்டு நாள் புல் வசூல் ஆகும். அதன்பின் சமர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படங்களின் ரிசல்டைப் பொறுத்து இதன் விதி அமையும்.

 

I am kundalakesi 2nd std avaiyar arambapada salai 

Rating: 1.5 

Directed by :  Suraj Produced by:    K. E. Gnanavelraja
Starring : Karthi, Anushka Shetty, Santhanam, Nikhita, Sanusha, Prathap Pothen
Music by :   Devi Sri Prasad
Cinematography :   Saravanan
Editing by :   Praveen K. L., N. B. Srikanth
Studio  :  Studio Green

Wednesday, January 2, 2013

பவர்ஸ்டாரையே அதிர வைத்த புது நடிகர்...

 

 

பவர்ஸ்டார் என்றாலே இன்று தெரியாத ஆளே உலகில் இருக்க முடியாது, அந்தளவிற்கு தன் அழகாலும், நடிப்பாலும், நடனத்தாலும் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நம்ம பவர்ஸ்டார் சீனிவாசன். அப்படிப்பட்ட அவரே அசந்து போய் அதிர்ந்து கிடைக்கிறாராம் ஒரு புதுமுக நடிகரைப் பார்த்துவிட்டு.... 
புதுமுக நடிகரைப் பார்த்து பவர்ஸ்டார் அதிர்ச்சியடைந்த செய்தி தமிழ் சினிமா உலகையே கலவரமடைய செய்துள்ளது. நாலு படங்கள் நடித்து முடிக்கும் முன்பே இப்படி ஒரு சோதனையா என்று பவர்ஸ்டார் புலம்பியதாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து உலகெங்கும் உள்ள பவர்ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பவர்ஸ்டார் ரசிகர்கள் யாரும் வீண் பதற்றம் அடையாமல் நம் பவர்ஸ்டாரையே அசத்திய அந்த புதுமுக நடிகரை பெருந்தன்மையோடு வாழ்த்தி வரவேற்குமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்....


அஜீத்துக்கு அப்புறம் கோட்டு சூட்டு இவ்ளோ நல்லாருக்கறது இவருக்குத்தான்.....

துப்பாக்கி-2 (அட ரெண்டு துப்பாக்கின்னு சொன்னேன்யா....)

முரட்டுக் கோட்டை இரும்பு சிங்கம்?

ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல? 

இவர் யார் என்று முதலில் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு........  ஒரு கமெண்ட் முழுக்க முழுக்க இனாம் இனாம் இனாம்.............!

Monday, December 24, 2012

மீண்டும் விருது வாங்கும் எண்ணமில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்




      
                                   ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆஸ்கார் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமது இசையால் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களை கடந்து ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியவர்.

கடந்த 1997ம் ஆண்டு தனது வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்ட ரஹ்மான், கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு பிறகு சமீபத்தில் ‘Infinite Love‘ என்ற தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் உலகம் முழுக்க சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், சமீபத்தில் வெளியான என்னுடைய ஆல்பத்தை இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளை வைத்து எடுத்துள்ளேன். இந்த ஆல்பத்தில் ‌எனது மகன் அமீனும் தோன்றியுள்ளான். ஆல்பமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

மீண்டும் ஆஸ்கார் கனவு எதுவும் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஏற்கனவே இரண்டு விருதுகளை வாங்கிவிட்டேன். எனவே மீண்டும் விருது எல்லாம் வாங்கும் எண்ணமில்லை என்றார்.