Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Tuesday, October 11, 2022

புறநகர் ரயிலில் பட்டா கத்தியுடன் பயணம்: 3 கல்லூரி மாணவர்கள் கைது

 

 


 

 

கும்மிடிப்பூண்டி அருகே புறநகர் ரயிலில் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணம் செய்த வழக்கில் 3 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே கடந்த வெள்ளிக்கிழமை புறநகர் ரயிலில் 4 நபர்கள் பட்டா கத்தியுடன் சென்றனர். அப்போது, அவர்களில் சிலர் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்த நபர்களை பிடிக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா உத்தரவிட்டார். இதன்பேரில், கொருக்குபேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னேரி அருகே கீரைபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருள்(18), எளாவூரைச் சேர்ந்த இரண்டு இளம்சிறார்கள் என மூன்று கல்லூரி மாணவர்களை கொருக்குப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

Sunday, January 22, 2017

பன்னீர்செல்வம்




உண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞரையோ முதல்வராக இருந்தால் என்ன நடந்திருக்கும்? போலீஸ் அராஜகத்துடன் முதலிலேயே அடக்கப்பட்டு இருக்கும்... பன்னீர் முதலில் கொஞ்சம் திணறினாலும் போலீஸாரிடம் சரியான உத்தரவு பிறப்பித்தது மட்டும் அல்லாது, தில்லிக்கு சென்று அவசர சட்ட வடிவை சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, வரைவை தயாரித்து, அமைச்சகங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி திரும்பி இருக்கிறார்... ஏதோ சட்ட நடைமுறைகளுக்கு பின் அவசர சட்டமாக நாளை சட்டசபையில் நிறைவேறுகிறது! எல்லாரையும் வருசக்கணக்கா நம்பிருக்கோம்ல? இவரை ஓரிரு நாட்கள் கூட நம்பாமல் மதுரை வந்தவரை திருப்பி அனுப்பியிருக்கிறோம்...
சின்னம்மா புகழ் பாடுகிறார், கூன் போட்டு நிற்கிறார் என்பதை தாண்டி இவர் ஒரு அணுக கூடிய முதல்வராக மரியாதையை கண்டிப்பாக பெறுகிறார்!
வாழ்த்துக்கள் திரு. பன்னீர்செல்வம்...
- ப்ளீஸ் சின்னம்மான்னு மட்டும் சொல்லாதீங்க சார். உங்க மேல இன்னும் நல்லமரியாதை வரும்.

Thursday, August 29, 2013

ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து
ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்
தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்)

மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும்.
அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம்.

புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.

உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். 

பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம்.

வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம்.

ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.

ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம்.

ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம்.

FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.

இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? 

பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். 

ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

Saturday, July 6, 2013

இன்று இளவரசன்??? நாளை??

இளவரசன், திவ்யா காதல் ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு....காதல் பறவையில் ஒன்றை கொன்று விட்டோம்...இனிமேல் திவ்யா வின் வாழ்க்கை???

இளவரசன், திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.....அதுவும் பலவிதமான போராட்டத்தோடு...திருமணம் வெற்றி கண்டு எட்டு மாத வாழ்க்கையையும் ருசி கண்டாகி விட்டது.

மகள் வேறு சாதி பையனை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத தந்தை தற்கொலையும் செய்து கொண்டு விட்டார்.   தனது காதல் கணவனை விட்டு விலகாத திவ்யா தற்போது இளவரசன் வேண்டாம் என்று சொல்ல இளவரசனின் மரணம் தற்போது நிகழ்ந்து உள்ளது.

இது கொலையா? தற்கொலையா? இதன் விபரம் எல்லாமே திவ்யா விற்கு மட்டுமே தெரியும்! 
அவள் வாய் திறந்து உண்மையை சொன்னால் மட்டுமே இளவரசனின் உண்மையான காதலின் அர்த்தம் உலகிற்கு புரியும்?

அவளாகவே விருப்பப்பட்டுத்தான் போராடித்தான் இந்த திருமணம் செய்து கொண்டாள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கணவரை விட்டுப் பிரியாதவள் இன்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தின் படி எனக்கு கணவரோடு வாழ விருப்பமில்லை, அம்மாவோடு வாழ விரும்புகின்றேன் என்று சொல்ல காரணம் என்ன?    இடையினில் நடந்தது என்ன?

யார் அவளை அப்படி பேசுமாறு நிர்பந்தித்தது? காதல் என்பது அவ்வளவு பாவமா? இன்று அம்மாவோடு போக வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு தன்னால் தனது கணவனின் வாழ்க்கைக்கு, உயிருக்கு ஆபத்து என்று தெரியவில்லையா அவளுக்கு? 

இதே திவ்யா அன்று நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவளை கணவரும் அவரது அம்மாவும் மிக நன்றாக பார்த்துக் கொள்கின்றார்கள் என்று சொன்னவள், அதன் பின்னர் எந்த பிரச்சினையிலும் நான் கணவரை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவள் இன்று திடீரென்று அம்மா தனிமையில் இருக்கின்றார்கள், அதனால் நான் அம்மாவோடு வாழப் போகின்றேன் என்று பேசுவதற்கு, அந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? இதைத்தான் அந்த திவ்யாவின் அம்மாவும் ஆசைப் பட்டார்களா? மகள் விதவையாய் வாழ்வதை எந்த தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அதுவும் இந்த சமுதாயத்தில் நடந்தேறி விட்டது...

இப்போதாவது திவ்யா வாய் திறந்து நடந்தது என்ன என்பதை சொன்னால்தான் இன்னும் பல சாவுகள், சாதி மோதல்கள் நடக்காமல் இருக்கும்.....அவள் காதல் உண்மை என்றால் அவள் வாய் திறப்பது மிக முக்கியம்....

சொல்லப் போனால் அவளது உயிருக்கும் இனி ஆபத்தே...எங்கே அவள் வாய் திறந்தால் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என்று அவளையும் அழிக்கத் தயங்க மாட்டார்கள் அந்த சாதி வெறி பிடித்த முதலைகள்....இனி காதல் வேண்டாம் என்று சொல்லவேண்டுமா? அல்லது சாதி பார்த்து காதலியுங்கள் என்று சொல்ல வேண்டுமா? அப்படி சொன்னால் அதற்க்கு பெயர் உண்மையான காதல்தானா? 

இரண்டு உயிர்களுக்கு உரிய காதல் பிரச்சினை, இரண்டு குடும்பங்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தாண்டி இரண்டு ஊர்கள், இரண்டு பிரிவு மக்கள் என்று பலதரப்பட்ட மக்களை தாண்டி இன்று ஒரு உயிரை காவு வாங்கி இருக்கின்றது...இதற்க்கு காரணம் யார்? 

விடைகளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்......வினாக்கள் மட்டுமே பல உருவாகின்றன! 

Saturday, June 15, 2013

மணிவண்ணன் மரணமடைந்தார்!!!!!!!! :(

Popular Tamil actor, writer and director R. Manivannan died on Saturday following a cardiac arrest, said a family friend. He was 58.

Manivannan passed away at his residence in Nesapakkam, the friend said. He is survived by his wife, son and a daughter.

"I can't believe he is no more. He was perfectly fine when I met him recently during the release of his 50th directorial film," the friend said.

Southern actor Siddharth took to Twitter to mourn the death of the multi-faceted talent.

"The great Manivannan Sir is no more. Many lives in cinema are what they are today because of him. Writer, director, actor… gone too soon. RIP," he posted.

Manivannan's 50th directorial outing was Tamil political-satire "Nagaraja Cholan MA, MLA", which recently released to a lukewarm response. It was the sequel to highly successful Tamil film "Amaidhi Padai".

Other noted films directed by Manivannan include "Pudhu Manithan", "Chinna Thambi Periya Thambi" and "Jalli Kattu".

It was as a character actor that Manivannan won the hearts of millions. Known for playing hero's uncle or father in most films, Manivannan will be remembered for his roles in Tamil films such as "Mudhalvan", "Sangamam" and "Ullathai Allitha". He worked in over 400 Tamil films.

He started his showbiz career as a writer. He penned dialogues for projects like "Tick Tick Tick" and "Kathal Ovium".


Thursday, March 28, 2013

இலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் மீது பழி சொல்லும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன. NDTV , முத்தையா முரளிதரனை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழ் கிரிக்கெட் வீரனே அந்த நாடு சுபிட்சமாக இருக்கிறது என்று கூறுகிறானே? இங்கே மாணவர்கள் ஏன் தவறாக போராடுகிறார்கள்.... என்று திசைதிருப்ப பார்க்கும் சகுனி வேலை தான் இது.

முத்தையா முரளீதரன் அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம்.

"ஒரு தமிழனாக இருபது வருடங்கள் நான் சிறிலங்காவிற்கு விளையாடினேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இப்பொழுது அங்கே போர் முடிந்துவிட்டது..மக்கள் மிகவும் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர்."

இந்த கருத்து தமிழக மாணவர்களிடையே கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. முத்தையா முரளிதரனின் மனைவிக்கு சொந்தமான மலர் மருத்துவமனை தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் காவல்துறை பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப் பட்டு உள்ளது.

இலங்கையில் எந்த அளவு மனித உரிமைகள் போற்றப் படுகிறது என்பது உலகறிந்த விஷயம். முரளிதரன் மட்டுமல்ல, எந்த தமிழராவது இலங்கை அரசை எதிர்த்து கருத்து தெரிவித்து விட்டால் ஒரு வெள்ளை வேன் வந்து அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் (http://bit.ly/YHucN9) . விசாரணை என்ற பெயரில் அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அப்புறம் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

அப்படி காணாமல் போன தமிழர்கள் ஏராளம்.

அரசின் அக்கிரமங்களை தட்டி கேட்டார் என்பதற்காக 'சண்டே லீடர்' ஆசிரியர்/ நிறுவுனர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த (http://bit.ly/107NmgX) அரசல்லவா ராஜபக்சே அரசு.

இன்றும் அரசுக்கு எதிராக எழுதும் பத்திரிக்கையாளர்கள் (http://goo.gl/GKbgU) சுடப்படுகிரார்களே ஏன்?

ஒளிபரப்பிற்கு இலங்கை அரசு இடையூறு செய்ததால் இலங்கையில் தனது தமிழ் -ஆங்கில ஒளிபரப்புகளை பி.பி.சி நிறுத்தி உள்ளதாக பி.பி.சி நிறுவனம் சற்றுமுன் அறிவித்து உள்ளது.

#முத்தையா முரளிதரன் அவர்களே.. நீங்கள் இப்படி சொல்லா விட்டால் இலங்கையில் நீங்க உயிரோடு இருக்க முடியாது என்பதும் அந்த அளவு அங்கே மனித உரிமைகள் போற்றபடுகிறது என்பதுவும் எங்களுக்கு தெரியும். So .... செத்த ______________ றேளா?


Wednesday, March 27, 2013

ஐபிஎல் கிரிக்கெட்டில் கையை வைத்த பிறகுதான் வட இந்திய ஊடகங்களும், மக்களும் தமிழர் பிரச்சனை பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர்.

Mainly to north indians... this is in ur laguages pls read and feel that tamilnadu is in india!!!!!!!
share to the core!!!!!!!!


ஐபிஎல் கிரிக்கெட்டில் கையை வைத்த பிறகுதான் வட இந்திய ஊடகங்களும், மக்களும் தமிழர் பிரச்சனை பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர்.

பல இடங்களில் தமிழர்களை தவறாக விமர்சித்து வருகின்றனர். இலங்கை ஒரு அப்பாவி என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ஈழ பிரச்சனை குறித்து சரியான புரிதல் இல்லாததே காரணம். அவர்களிடையே ஈழத்தின் உண்மை பற்றி எடுத்து செல்ல இது சரியான தருணம்.

கீழே ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் ஐபிஎல்-லில் இலங்கை அணி தடை செய்ய வேண்டியதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றை உங்கள் மற்ற மாநில நண்பர்களிடம் பகிருங்கள். ஈழ தமிழர் பிரச்சனையை இந்திய மாணவர்கள் அளவில் கொண்டு செல்லுங்கள்.

கீழே உள்ளவற்றை Copy செய்து பகிர வேண்டிய இடத்தில் Paste செய்து பயன்படுத்துங்கள்.

*************************************************************************
In English :

Why Tamil Nadu demanded ban of Sri Lankan Players playing from IPL in Chennai???

"It is exactly as Pakistan Players being banned from playing IPL"

** Sri Lankan govt killed more than 600 Indian fishermen.

** Sri Lankan govt slaughtered thousands and thousands for innocent Tamils (Women, Children) mercilessly in the Island.

When Pakistan attacks Indians, Indian govt is ready to brake any relationship with Pakistan.

How can the Indian Govt say "Sri Lankas is our friendly nation" when this small island can kill number of Indian fishermen and they go unnoticed??

Tamils are also Indians. I support students revolution in tamil nadu.

If tamil nadu is part of india, india should treat sri lanka as it treats pakistan.

Indian govt should insist international human rights enquiry in the island and bring a referendum for tamil eelzam.

Attacks on indian fishermen by srilanka :http://www.savetnfishermen.org/

Video links:
https://www.youtube.com/watch?v=ugLgsJxXs24
https://www.youtube.com/watch?v=NY64zdevgu8
https://www.youtube.com/watch?v=NY64zdevgu8

https://www.youtube.com/watch?v=Wfz9Q3jCNIY
https://www.youtube.com/watch?v=jZC1uclgbc0
https://www.youtube.com/watch?v=Rkksae17Zhc

********************************************************************************

in Hindi:

श्रीलंका खिलाड़ियों को IPL खेलने से तमिल नाडू सरकार क्यों प्रतिबंध किया?

" कैसे पाकिस्तान के खिलाड़ियों को आईपीएल खेलने से प्रतिबंधित किया जा रहा है। यह बिल्कुल उसी तरग है।"

** श्रीलंका सरकार ने 600 से अधिक भारतीय मछुआरों (भारत सरकार के लिए वे तमिल मछुआरों) को मार डाला
** श्रीलंका की सरकार निर्दोष हजारों और हजारों (महिलाओं, बच्चों) तमिलों को मार डाला

जब पाकिस्तान भारत में हमला किया भारत - पाकिस्तान के साथ किसी भी रिश्ते को ब्रेक करने के लिए तैयार है.

भारत सरकार कैसे कह सकते हैं? "श्रीलंका हमारे अनुकूल देश है," जब इस छोटी सी आइलैंड भारतीय मछुआरों मारे और वे किसी का ध्यान में नहीं जाता हैं?

तमिलों भी भारतीयो हैं. मैं तमिलनाडु में छात्रों को क्रांति का समर्थन करता हूँ।.

अगर तमिलनाडु भारत का हिस्सा है, तो भारत, श्रीलंका के साथ भी पाकिस्तान की तरग व्यवहार करना चाहिए.

भारत सरकार द्वीप में अंतरराष्ट्रीय मानव अधिकार पूछताछ जोर और तमिल EELZAM के लिए एक आम मतदान लाना चाहिए

Attacks on indian fishermen by srilanka :http://www.savetnfishermen.org/

Video links:
https://www.youtube.com/watch?v=ugLgsJxXs24
https://www.youtube.com/watch?v=NY64zdevgu8
https://www.youtube.com/watch?v=NY64zdevgu8

https://www.youtube.com/watch?v=Wfz9Q3jCNIY
https://www.youtube.com/watch?v=jZC1uclgbc0
https://www.youtube.com/watch?v=Rkksae17Zhc

Tuesday, March 26, 2013

சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடமாட்டார்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு


banner-1-6708டெல்லி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் 
என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருக்கிற சூழ்நிலையில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் இடம்பெறாத போட்டிகளை மட்டுமே சென்னையில் நடத்த அனுமதிக்க முடியும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியது நினைவிருக்கலாம்.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல். நிர்வாகிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் கடிதம்…
இது தொடர்பாக ஐ.பி.எல். தலைவரும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க அமைச்சருமான ராஜீவ் சுக்லா விடுத்துள்ள அறிக்கை:
சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் பங்கேற்பதை நான் அனுமதிக்க முடியாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக ஐ.பி.எல். நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடியது.
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற வீரர்கள், போட்டிகளை காண வருகிற பார்வையாளர்கள், மைதானங்களில் பணியாற்றுகிறவர்கள் என அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் தருகிறது. எனவே இரண்டு அம்சங்களை நாங்கள் கவனத்தில் கொண்டோம். உள்ளூர் உணர்வுகள், இலங்கை வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு கவனத்தில் கொண்டது.
இலங்கை வீரர்கள் பங்கேற்பு இல்லை
உள்ளூர் நிர்வாகம் ஒன்றைக் கூறுகிறபோது, நாங்கள் அதற்கு செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்தப் போட்டியை நடத்துவதில் குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநில அரசு அதிகாரிகளின் உதவி எங்களுக்கு தேவையாக இருக்கிறது.
உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.எனவே சென்னையில் நடைபெறுகிற பெப்சி ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி 9 ஐ.பி.எல். அணிகளுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய தடகளப் போட்டிகளைத் தொடர்ந்து…
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால், 20 வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியாது. வேறு எங்காவது நடத்திக் கொள்ளுங்கள் என முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
இலங்கை வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 13 இலங்கை வீரர்கள் உள்ளனர். தில்ஷான், சங்கக்கரா, மலிங்கா, ஜெயவர்தன, ஏஞ்சலோ மாத்யூஸ், குலசேகர, அகிலா தனஞ்செயா, ஜீவன் மென்டிஸ், சசித்ர சனநாயக, அஜந்தா மென்டிஸ், குசால் பெரேரா, முத்தையா முரளிதரன், திசரா பெரேரா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்கள் 8 ஐபிஎல் அணிகளில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குலசேகரா மற்றும் தனஞ்செயா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்போது அவர்களை நீக்கிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஹைதராபாத் அணியிலிருந்து திசரா பெரேரா மற்றும் சங்கக்கரா இன்னும் நீக்கப்படவில்லை.

Hats off to him... Frank and bold comments on Eezham issue!!


Thursday, March 21, 2013

ஜெனீவா

ஜெனீவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதத்துடன் தொடங்கிய வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தது. தீர்மானத்துக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தது.Geneva_HumanRigh_sCouncilஇந்தியா வலியுறுத்தல்
இலங்கை நிகழ்வுகள் பற்றி சுயேச்சையான நம்பகத்தனமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் தமிழருக்கு அரசியல் உரிமை தர ஆக்கபூர்வ நடவடிக்கை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய இந்தியா இலங்கை சம்பவங்கள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது என்று கூறினார். சர்வேதச பரிந்துரைகள் இந்த தீர்மானத்தில் இதில் இல்லை என்றும், இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தீர்மானம்

Decision of USA is supported by india in geniva but with some modifications....
Total supporting nations:25
Total nation against :13

conclusion : no use and waste.... no genocide mentioned,no war crime mentioned, no anti humanity act of lanka mentioned......... students hope this the time for us to protest indian gov not an lankan gov......

DO INDIA care for lanka or its tamilians

Wednesday, March 20, 2013

இந்திய அரசே உஷார்

இலங்கைப்போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. 
அதில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக எதிர்ப்புகளை பசுமைத்தாயகம் அமைப்பு பதிவு செய்து வருகிறது....

அந்நாட்டு பிரதிநிதி மகிந்த சமரசிங்கே அளித்த விளக்கம் பின்வருமாறு:-

2009 போருக்கு பிறகு, இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.நா.மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகள்,இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைத் தீர ஆராய வேண்டுமென்றும் தவறான முன் உதாராணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறைபாடுடைய, தவறான அர்த்தம் கற்பிக்கும் ஆவணங்களைக் காட்டி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏன்டா வீடியோல தெள்ள தெளிவா பதிஞ்சி இருக்கு... அத பாத்தும் அந்த ஆவணகளை பொய்னு சொன்ன, அத நம்புறதுக்கு அவங்க என்ன முட்டாள்கள.... ஆனாலும் இந்த ஜெனீவா 
ஆளுங்க அவன் சொல்றத பொறுமையா கேக்குறது பாத்த எதுவும் சரியா படலை..... இந்தியவை திரும்பி பார்க்க வெச்ச மாணவர்களுக்கு தான் நன்றி சொல்லணும். சரியான தீர்மானம் கொண்டுவரல, இதுக்கு மேலயும் மாணவர்கள் இருங்க தயார்!!!!! இந்திய அரசே உஷார்

Monday, March 18, 2013

மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா

சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை-. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது. இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார்.