மீண்டும் கிழிந்தது கிரிக்கெட் முகமூடி!
கிரிக்கெட் விளையாட்டே கிட்டத்தட்ட சூதாட்டம் என்கிற அளவுக்கு மாறிப்போன நிலையில், அசாருதீன் உள்ளிட்ட பலரின் தலையும் இதில் உருண்டது. இந்த சூழலில் புகழ் மங்கியிருந்த கிரிக்கெட்டுக்கு 'ஐபிஎல்' என்கிற பெயரில் இந்தியாவில் உயிரூட்டி, பல கோடிகளை கல்லா கட்டி வருகின்றனர் பெருமுதலாளிகள். இதிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள்... மேட்ச் ஃபிக்ஸிங் என்றªல்லாம் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலால், அங்கித் சவான் ஆகிய மூன்று வீரர்களும் ஏழு சூதாட்ட புரோக்கர்களும் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகக்கூடி, 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'.
விளையாட்டு என்கிற பெயரில் ஏகப்பட்ட விளம்பரங்களை அள்ளிவிட்டு, மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, டிக்கெட் என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு உதவியாக இருக்கும் இந்த கிரிக்கெட்டுக்குத்தான் அரசாங்கமும் மாறி மாறி ஆராதனை செய்து கொண்டிருக்கிறது.
'இந்திய கிரிக்கெட் வாரியம்' என்கிற பெயரில் இயங்கும் இந்த தனியார் கிரிக்கெட் அணிக்கு பெயர்... இந்திய அணி!
இதில் விளையாடி கோடிகோடியாக லாபம் அள்ளும் இவர்களுக்கு ஆயிரமாயிரம் அரசாங்க சலுகைகள்!
விளம்பரம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற வகைகளில் பணம் பண்ணும் இவர்களுக்கு விருதுகள், பதவிகள்!
ஆனால், இந்த நாட்டுக்காக உணவு உற்பத்தி செய்யும் விவசாயி, மூட்டைக்கு பத்து ரூபாய் உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்டால்... தடியடி... துப்பாக்கிசூடு!
லாட்டரி சீட்டை தடை செய்தது போல... இந்த 'சூதாட்ட கிரிக்கெட்'டையும் தடை செய்யும் வரை விமோசனமே இல்லை!
No comments:
Post a Comment