பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா விரைவில் சீரியல் நடிகரை திருமண செய்ய இருக்கிறார். தமிழில் விஜய்யுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் பிறகு பாலிவுட்டுக்குச் சென்று பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
எனவே, பிரியங்கா சோப்ராவும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்துகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பிரியங்கா சோப்ராவின் சித்தி வரன் பார்க்க தொடங்கியுள்ளார். நிறைய மாப்பிள்ளைகளை பார்த்திருக்கிறார். அந்த மாப்பிள்ளைகளில் ஒருவர் மொகித் ரெய்னா. இவர் ஹிந்தியில் பிரபலமான டி.வி. நடிகர் ஆவார். இவரை தெரியாத ஹிந்தி ரசிகர்களே இல்லை. புராண தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருக்கு மொகித் ரெய்னாவை பிடித்துள்ளதாம். பிரியங்கா சோப்ராவுக்கும் விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.
No comments:
Post a Comment