Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts
Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts

Friday, December 6, 2013

இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!

இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க! 

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, “பென்ஸ்’ மோட்டார் தொழிற்சாலையில், “பிட்டர்’ ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.

பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது… ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, “டாட்டா’ கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது… நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்… இங்கே லேபர், “சீப்!’ அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, “அட்வான்டேஜ்’ ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, “சீப்’ என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…’ என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்… ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…

இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க! கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்…

ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,’ என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.


Courtesy:osmeb

Monday, September 9, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??..

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)
சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Friday, August 30, 2013

தெரிந்து கொள்ளுங்கள்..

தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்

Tuesday, August 13, 2013

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்... குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

Saturday, July 6, 2013

(மனிதனும் தவளையும் )Human Beings and Frogs - Inspirational Story

Human Beings and frogs are the two creatures in nature who have tremendous power to adjust. Put a frog in a vessel of water and start heating the water. As the temperature of the water rises, the frog is able to adjust its body temperature accordingly. The frog keeps on adjusting with increase in temperature. Just when the water is about to reach boiling point, the frog is not able to adjust anymore. At that point the frog decides to jump out. The frog tries to jump but is unable to do so, because it lost all its strength in adjusting with the water temperature. Very soon the frog dies. 

What killed the frog? Many of us would say the boiling water. 

But the truth is what killed the frog was its own inability to decide when it had to jump out.

We all need to adjust with people and situations, but we need to be sure when we need to adjust and when we need to face. There are times when we need to face the situation and take the appropriate action. 

If we allow people to exploit us physically, emotionally or financially, they will continue to do so. We have to decide when to jump. Let us jump while we still have the strength! 

இன்று இளவரசன்??? நாளை??

இளவரசன், திவ்யா காதல் ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு....காதல் பறவையில் ஒன்றை கொன்று விட்டோம்...இனிமேல் திவ்யா வின் வாழ்க்கை???

இளவரசன், திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.....அதுவும் பலவிதமான போராட்டத்தோடு...திருமணம் வெற்றி கண்டு எட்டு மாத வாழ்க்கையையும் ருசி கண்டாகி விட்டது.

மகள் வேறு சாதி பையனை திருமணம் செய்துகொண்டதை தாங்க முடியாத தந்தை தற்கொலையும் செய்து கொண்டு விட்டார்.   தனது காதல் கணவனை விட்டு விலகாத திவ்யா தற்போது இளவரசன் வேண்டாம் என்று சொல்ல இளவரசனின் மரணம் தற்போது நிகழ்ந்து உள்ளது.

இது கொலையா? தற்கொலையா? இதன் விபரம் எல்லாமே திவ்யா விற்கு மட்டுமே தெரியும்! 
அவள் வாய் திறந்து உண்மையை சொன்னால் மட்டுமே இளவரசனின் உண்மையான காதலின் அர்த்தம் உலகிற்கு புரியும்?

அவளாகவே விருப்பப்பட்டுத்தான் போராடித்தான் இந்த திருமணம் செய்து கொண்டாள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கணவரை விட்டுப் பிரியாதவள் இன்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தின் படி எனக்கு கணவரோடு வாழ விருப்பமில்லை, அம்மாவோடு வாழ விரும்புகின்றேன் என்று சொல்ல காரணம் என்ன?    இடையினில் நடந்தது என்ன?

யார் அவளை அப்படி பேசுமாறு நிர்பந்தித்தது? காதல் என்பது அவ்வளவு பாவமா? இன்று அம்மாவோடு போக வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு தன்னால் தனது கணவனின் வாழ்க்கைக்கு, உயிருக்கு ஆபத்து என்று தெரியவில்லையா அவளுக்கு? 

இதே திவ்யா அன்று நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவளை கணவரும் அவரது அம்மாவும் மிக நன்றாக பார்த்துக் கொள்கின்றார்கள் என்று சொன்னவள், அதன் பின்னர் எந்த பிரச்சினையிலும் நான் கணவரை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவள் இன்று திடீரென்று அம்மா தனிமையில் இருக்கின்றார்கள், அதனால் நான் அம்மாவோடு வாழப் போகின்றேன் என்று பேசுவதற்கு, அந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? இதைத்தான் அந்த திவ்யாவின் அம்மாவும் ஆசைப் பட்டார்களா? மகள் விதவையாய் வாழ்வதை எந்த தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அதுவும் இந்த சமுதாயத்தில் நடந்தேறி விட்டது...

இப்போதாவது திவ்யா வாய் திறந்து நடந்தது என்ன என்பதை சொன்னால்தான் இன்னும் பல சாவுகள், சாதி மோதல்கள் நடக்காமல் இருக்கும்.....அவள் காதல் உண்மை என்றால் அவள் வாய் திறப்பது மிக முக்கியம்....

சொல்லப் போனால் அவளது உயிருக்கும் இனி ஆபத்தே...எங்கே அவள் வாய் திறந்தால் உண்மைகள் வெளியே வந்து விடுமோ என்று அவளையும் அழிக்கத் தயங்க மாட்டார்கள் அந்த சாதி வெறி பிடித்த முதலைகள்....இனி காதல் வேண்டாம் என்று சொல்லவேண்டுமா? அல்லது சாதி பார்த்து காதலியுங்கள் என்று சொல்ல வேண்டுமா? அப்படி சொன்னால் அதற்க்கு பெயர் உண்மையான காதல்தானா? 

இரண்டு உயிர்களுக்கு உரிய காதல் பிரச்சினை, இரண்டு குடும்பங்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தாண்டி இரண்டு ஊர்கள், இரண்டு பிரிவு மக்கள் என்று பலதரப்பட்ட மக்களை தாண்டி இன்று ஒரு உயிரை காவு வாங்கி இருக்கின்றது...இதற்க்கு காரணம் யார்? 

விடைகளை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம்......வினாக்கள் மட்டுமே பல உருவாகின்றன! 

Friday, June 14, 2013

நீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று..?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று..?

மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போத ும் தாமதப்படுத்தும் போதும் எப்படி உணர்வீர்கள்?சுத ந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும்இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை .அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்புகொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம்முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா ?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோ மா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும்அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாகநீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும்பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்ப ினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங ்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர்சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்த ி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றைகேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

-சதிஸ் செல்லதுரை
எல்லை படை அதிகாரி-


Thursday, May 16, 2013

ஐபிஎல் சூதாட்டம்... மீண்டும் கிழிந்தது கிரிக்கெட் முகமூடி!

ஐபிஎல் சூதாட்டம்...
மீண்டும் கிழிந்தது கிரிக்கெட் முகமூடி!



கிரிக்கெட் விளையாட்டே கிட்டத்தட்ட சூதாட்டம் என்கிற அளவுக்கு மாறிப்போன நிலையில், அசாருதீன் உள்ளிட்ட பலரின் தலையும் இதில் உருண்டது. இந்த சூழலில் புகழ் மங்கியிருந்த கிரிக்கெட்டுக்கு 'ஐபிஎல்' என்கிற பெயரில் இந்தியாவில் உயிரூட்டி, பல கோடிகளை கல்லா கட்டி வருகின்றனர் பெருமுதலாளிகள். இதிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள்... மேட்ச் ஃபிக்ஸிங் என்றªல்லாம் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலால், அங்கித் சவான் ஆகிய மூன்று வீரர்களும் ஏழு சூதாட்ட புரோக்கர்களும் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகக்கூடி, 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'.

விளையாட்டு என்கிற பெயரில் ஏகப்பட்ட விளம்பரங்களை அள்ளிவிட்டு, மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, டிக்கெட் என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு உதவியாக இருக்கும் இந்த கிரிக்கெட்டுக்குத்தான் அரசாங்கமும் மாறி மாறி ஆராதனை செய்து கொண்டிருக்கிறது.

'இந்திய கிரிக்கெட் வாரியம்' என்கிற பெயரில் இயங்கும் இந்த தனியார் கிரிக்கெட் அணிக்கு பெயர்... இந்திய அணி!
இதில் விளையாடி கோடிகோடியாக லாபம் அள்ளும் இவர்களுக்கு ஆயிரமாயிரம் அரசாங்க சலுகைகள்!
விளம்பரம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற வகைகளில் பணம் பண்ணும் இவர்களுக்கு விருதுகள், பதவிகள்!
ஆனால், இந்த நாட்டுக்காக உணவு உற்பத்தி செய்யும் விவசாயி, மூட்டைக்கு பத்து ரூபாய் உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்டால்... தடியடி... துப்பாக்கிசூடு!

லாட்டரி சீட்டை தடை செய்தது போல... இந்த 'சூதாட்ட கிரிக்கெட்'டையும் தடை செய்யும் வரை விமோசனமே இல்லை!

Saturday, May 11, 2013

கேரளாவில் நடந்த சம்பவம்...10 வயது மாணவன் ஒருவன்


கேரளாவில் நடந்த சம்பவம்...
10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.முழு உடல் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.
அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்று கேட்டார் டாக்டர்.
15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கும்போது பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது.
பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார்.
இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண் பர்களே...

Saturday, April 27, 2013

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

Friday, April 26, 2013

10 Little Habits That Can Destroy Your BRAIN



It’s good if you re-examine the little habits that you think is simple but have negative impact on your brain, those habits are:

1. Skipping Breakfast - Many people underestimate the breakfast. And do not consume anything in the morning and caused the decline in blood sugar levels. This resulted in a lack of input of nutrients to the brain which finally ended in the decline of the brain. The best breakfast in the morning is not a heavy foods such as special burger, but a glass of water and a glass of fresh fruit juice is enough. Compact and useful for the body!


2. Gluttony - Too much to eat can harden the blood vessel of the brain that usually leads to the decline of mental powers. So eat a normal portion. Familiarize yourself with how to help stop eating before you’re stuffed.

3. Smoking - If the cigarette has a lot of bad effects, everyone would already know. And there’s one more bad effects of cigarettes that were uncovered here. Smoking was very frightening effect on the brain!
Imagine, the human brain can gradually shrink and eventually loses its functions as diligent suck it smoky. No doubt the old time when even young ones, we are prone to Alzheimer (Alzheimer is a dementia disease).

4. Consuming Too Much Sugar - Too much sugar intake will prevent the absorption of protein and nutrients that makes the body get malnutrition and disrupted brain development. Therefore, reduce the consumption of your favorite sweets.

5. Air Pollution - The brain is part of the body absorbs the most air. Too long in the environment by polluting the air makes the brain works inefficiently.

6. Sleep Deprivation - Sleep gives the brain a chance to rest. Often neglect to sleep makes the brain cells to die from exhaustion. But do not get too much sleep because it can make you become lazy and slow. Should
sleep 6-8 hours a day for healthy and fit.

7. Covering one’s head during sleep - Sleeping with the head covered is a bad habit that is very dangerous because the carbon dioxide produced during sleep makes the brain concentrated with pollutant. Do not be surprised if over time the brain becomes damaged.

8. Thinking Too Hard - When sick Working hard or studying when the body condition is not fit also makes the ineffectiveness of the brain. Already know You are not healthy, you should rest and not impose your brain.

9. Lack of Brain Stimulation - Thinking is the best way to train the brain works.Less thought would make the brain shrink and ultimately does not work optimally. Diligent reading, listening to music and playing (chess, Scrabble, etc.) will make your brain used to think actively and creatively.

10. Rarely Talking - Intellectual conversations usually take a good effect on the brain. So do not be too proud to be quiet. Quality Chatting is very good for your health.

Please Share with friends and family

Wednesday, March 20, 2013

தமிழ் ஈழம் வரலாறு

HISTORY OF TAMIL EELAM:

1. Ceylon gained independence on February 04, 1948. However, it was not complete independence. In terms of the defense agreement entered into between Britain and Ceylon, Colombo, Trincomalee and Katunayake bases continued to remain under British control.

2. In 1948, the very year of independence, the Parliament dominated by the majority Sinhalese, enacted the Citizenship Act which reduced the political strength of the Tamils by one-half. Under this Act, one million Hill country Tamils, whom the British brought from South India 200 years before to work in the tea and rubber plantations, lost their citizenship rights.

3. In 1958 following the National convention of the Federal Party held in Vavuniya, violence was let lose against the Tamils. There were heavy losses of lives and property..

4. The government of Bandaranayake(leader of the Srilanka Freedom Party and Prime Minster) passively connived with the Sinhalese hoodlums responsible for the violence directed against the Tamils and imposed emergency rule only after 4 days of rioting.

5. Because of the New Republican Constitution the sovereignty of the Sinhalese and the sovereignty of the Tamils reverted back to the Sinhalese and Tamils. To safeguard the language and education rights of Tamils, to halt the encroachment of Tamils traditional homeland through Sinhalese colonization, to stay and hit back when attacked by the Sinhalese, Prabhakaran realized that taking up arms is the only way. He formed the New Tamil Tigers organization comprising brave, self-sacrificing and disciplined youths.

6. On July 27, 1975 Tamil traitor Alfred Duraiappah was shot dead. This marked the first attack in the history of the armed liberation struggle. The attack was mounted by Tamil New Tigers under the leadership of V. Prabhakaran.

7. On May 5, 1975 with the object of rallying the entire Tamil nation, the "Tamil New Tigers" were re-named "Liberation Tigers of Tamil Eelam." V. Prabhakaran was named the Chairman and Military Commander of the LTTE.

8. On July 24, 1983 The Liberation Tigers mounted their first guerrilla style ambush using land mine against the Srilanka army. 13 soldiers died in this attack.

This was followed by the worst genocidal attack by the Sinhalese on the Tamils. Thousands of lives and property worth many millions were lost. Tamils girls were subjected to sexual violence.

Sriliankan Tamil Famous Peoples:

1. Chandrababu - Renowned actor, comedian & singer.
2. Balu Mahendra – Prominent Kollywood film director.
3. MGR- Actor and Later Cheif minister of TN, Kandy.
4. Muthiah Muralitharan - Sri Lankan cricketer. Leading Test wicket taker in the world
5. Angelo Mathews - Sri Lankan cricketer and the current vice captain of the Sri Lankan cricket team
6. Russel Arnold- Former Sri Lankan test cricketer and international commentator

உலக சிட்டுக்குருவி தினம்


Monday, March 18, 2013

மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா

சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை-. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம். மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது. இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார்.