படத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே
ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை
நையப்புடைக்கும் கார்த்தி. 30-40 பேரை அடிக்கிறார். தாவி தாவி உதைக்கிறார்.
குறுக்கால போய் ட்ரெயின புடிக்க ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. மறுபடி ஒரு
20பேர அடிக்கிறார்.
அப்புறம் ஒரு பாலத்துக்கு கீழ ட்ரெயின் போயிட்டு இருக்கப்ப பாலத்துக்கு
மேலே கார்த்தி நிக்கிறார்((அப்ப மிஸ் ஆச்சுல்ல அதே ட்ரெயின்.. இவரு பைட்டு
முடிச்சுட்டு வரட்டும்னு ட்ரெயின் ட்ரைவர் ஓரமா நிப்பாட்டிட்டு ஒரு டீ
சாப்பிட்டிருப்பார் போல). ட்ரெயின் மீது குதித்து இன்னும் ஒரு 10 பேரை தாவி
உதைத்து, கொஞ்ச நாளாய் தமிழ் சினிமாவில் காணமல் போயிருந்த ரயில்
பெட்டிக்கு மேலே நடக்கும் சண்டையை மீண்டும் போட்டு கதாநாயகியைக்
காப்பாற்றுகிறார்.கட் பண்ணீங்கண்ணா சந்தானத்தோட வீடு. அவருக்கு அழகான 3 தங்கச்சிங்க(நிகிதா, சனுஷா, அப்புறம் யாரு சார் அந்த அழகான புதுப்பொண்ணு?). வீட்டுக்குள் உள்ளே படுத்திருக்கிறார் கார்த்தி. அந்த 3 தங்கைகளும் கார்த்தி மீது லிட்டர் லிட்டராய் ஜொள்ளு விடுகிறார்கள். மாராப்பை விலக்கியபடி தான் பேசுகிறார்கள். கேரம் போர்டு விளையாடும் போது இந்த காய அடி மாமா என அப்பாவியாய் பேசுகிறார்கள். நெஞ்சோடு நெஞ்சு இடிப்பதை விளையாட்டு என நினைத்து விளையாடுகிறார்கள். அவர்களை குனிய வைத்து இடுப்பை பிடித்து தாவ முயலுகிறார். இப்படி இன்னும் சில விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். எல்லா விளையாட்டிலும் அந்த 3 தங்கைகளும் சேலை விலகிய மார்போடும், இடுப்போடும் அடக்கமாய் இருக்க, அந்த தங்கைகளை காப்பாற்ற போராடுகிறார் சந்தானம். போதாதுக்கு அவரது அம்மா காரக்டரையும் இழுக்கும் இரட்டை அர்த்த டயலாக்குகள். அது என்ன வீடா இல்ல சிலுக்கூர்பேட்டை ப்ராத்தல் ஏரியாவான்னு நமக்கு கொஞ்சமல்ல நிறையவே சந்தேகம் வரும். இதுக்கிடையில இந்த 3 பேரேட சேர்ந்து ஆடுற பாடல்.. அப்புறம் வயசுக்கு வந்ததைக் கொண்டாடும் இன்னொரு அர்த்தமுள்ள பாடல் வேற. இடையில ஆக்சன் படம்னு காமிக்க ஒரு சம்பந்தம் இல்லாம சண்டை வேற.
அப்புறமா இன்டர்வல் டைம்ல அனுஷ்கா மீண்டும் வர்றாங்க. இவரு சி.எம் பொண்ணு. இவர தேடி அலையுற குரூப்போட தலைவர் மிலிந்த் சோமன். ட்ராகுலா படத்துல வர்ற மாதிரி முழங்கால் அளவுக்கு ரெண்டு பக்கமும் காத்துல பறக்குற கோட் என்னேரமும் போட்டிருக்கிறார் . கூடவே நாலு,ஸ்கார்ப்பியோ, 40 கோட் போட்ட அடியாட்கள் என லாஜிக் மாறாமல். அவங்க மறுபடி கார்த்தி, அனுஷ்காவ கண்டுபிடிச்சு துரத்த காட்டுக்குள்ள போறாங்க.
ஒரு ஃப்ளாஸ்பாக் சொல்றாங்க. அது என்னன்னா... மாற்றான் மாதிரி அமெரிக்கால தடை செஞ்ச மருந்த இங்க விக்க வற்றாரு வில்லன். முதலமைச்சர் அனுமதி மறுக்குறாரு. வில்லன் உடனே ஒரு சாமியார் உதவியோட திட்டம் போட்டு சி.எம் பொண்ண கடத்த சொல்றாரு. கடத்துற ஆள்தான் கார்த்தி. கடத்தி காட்டுக்குள்ள போறாரு. அங்க ரெண்டு பேரும் ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ப்ரீயா திரியுறாங்க. இடையில காமெடி பண்றேன்னு மனோபாலாவை போட்டு கட்டிவச்சி மாறி மாறி அடிக்கிறாங்க. சி.எம்.பொண்ணு அனுஷ்கா அதுவரைக்கும் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. இவரு சறுக்கி விழுந்தப்ப கார்த்தி காப்பாத்த உடனே லவ்வு வந்துடுது. வில்லன்கிட்ட ஒப்படைக்க போறப்ப இது மக்களை பாதிக்கிற விசயம் இத நீ செய்யனுமான்னு அனுஷ்கா கேட்க உடனே கார்த்திக்கு ஞானோதயம் வந்து வில்லன்களோட சண்டை போட்டு அனுஷ்காவ காப்பாத்துறாரு.. அப்ப ஓடுனதுதான் பர்ஸ்ட் சீன்.
இப்போ ப்ளாஸ் பேக் முடிஞ்சாச்சா.. மறுபடி சந்தானத்தோட காட்டுக்குள்ள இன்னும் நாலு சுமாரான காமெடி.
முதல்வரோட பி.ஏ. பிரதாப் போத்தனும் இதுல உடந்தைன்னு சின்ன குழந்தை கூட யூகிக்ககூடிய டிவிஸ்ட ரொம்ப பெரிசா பில்டப் பண்ணி காமிக்க, மறுபடி வில்லன்களிடம் அனுஷ்காவும், கார்த்தியும் மாட்டிக்கொள்ள, மறுபடி அவர்களிடமிருந்து அனுஷ்காவை கார்த்தி எப்படி காப்பாத்துறார்ங்கிறது கிளைமாக்ஸ். எப்படி காப்பாத்துறார்?
அதுதான் படத்துலயே ரொம்ப ஹைலைட்.
கட்டிக்கிடக்கிற கார்த்திய வில்லன்கள் சுமனும், மிலிந்த் சோமனும் புட்பாலால் உதைத்து டார்ச்செர் செய்கின்றனர். (10-15 வருசம் முன்னாடி வந்த அர்ஜீன் படங்கள்ள சரண்ராஜ் மாதிரி வில்லன்கள் இப்படித்தான் கிரிக்கெட் பாட் வைச்சு, க்ளவுஸ், லெக்பேட்லாம் கட்டி, அர்ஜீனை கிரிக்கெட்பாலால அடிச்சு டார்செர் பண்ணுவார்) அப்ப, நீங்கல்லாம் ஆம்பளையா முடிஞ்சா அவரை அவுத்துவிட்டு அடிங்க என காலங்காலமாய் கதாநாயகிகள் க்ளைமாக்ஸில் சொல்லும் டயலாக்கை அனுஷ்காவும் மறக்காமல் சொல்ல அப்புறம் என்ன? அதை மட்டும் நீங்க வெள்ளித்திரையில் தான் கண்டுகளிக்கனும் சொல்லிப்புட்டேன் ஆமாம்.
சந்தானம் ஆரம்ப காலத்துல விஜய் டிவில அப்ப வந்த மொக்கை படங்களை கண்ணாபிண்ணான்னு கலாய்ச்சு பிரபலம் ஆனார். இப்ப அவரும் அதையெல்லாம் விட படு மொக்கையான படத்தில். பாவமாய் இருக்கிறது. அதிலும் 3 தங்கைகளை வைத்து நடக்கும் ஆபாசக்கூத்து. (by the way, படத்துக்கு யூ சர்ட்டிபிகேட்). இப்படி இன்னும் எத்தனை படங்களில் தான் ஹீரோக்களுக்கு தங்கைகளை வைத்து செட்டப் பண்ணும் அல்லது காப்பாற்றும் கதாபாத்திரத்தை தாங்கிப்பிடிப்பாரோ. இந்த கடுப்பில் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா போல ரூட் மாறிவிட்டார் போல.
கார்த்திக்கு சகுனியில் ஒரு சறுக்கல் அதையடுத்து என்ன மாதிரி படம் செய்து தன் மார்க்கெட்டை சரி செய்ய முயலுவார்னு ஒரு யோசணை இருந்தது.
நடிகர்கள் சாதாரணமாய் இருக்கும் போது நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். மாஸ் ஹீரோ என்ற பெயரும் மார்க்கெட்டும் வந்ததும் மாஸ் படம் என்ற பெயரில் மொக்கை கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். என்ன எழவு லாஜிக்கோ.
இப்பல்லாம் தெலுங்குப் படங்களே ரொம்ப மாடர்ன்னா, out of the box ஆயாச்சு. ஆனா இவங்க தமிழ்-தெலுங்கு இரு மொழியில எடுக்குறேன்னு 20 வருசத்துக்கு முன்னாடி வந்த தெலுங்குப்படங்களோட போட்டி போட்டு எடுத்துருக்காங்க.
சந்தானத்தின் சில டயலாக்குகள் சிரிக்க வைக்கின்றன. 'கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது', 'சிக்ஸ் பேக் இல்லாட்டியும் நல்ல ப்ளாஸ் பேக் வைச்சிருக்கே.' ரகத்தில்.
படத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விசயம். சண்டைக்காட்சிகள். முன்னெல்லாம் ரோப்புல கட்டி தூக்கி எடுத்த பைட்லாம் பார்த்தா காமெடியா இருக்கும். கால் படாமலே வெறும் சவுண்ட் குடுத்துட்டு 40 அடி தள்ளி போய் விழுவாங்க. சின்னபுள்ளத்தனமா ஏர்ல பறப்பாங்க. இடுப்புல ரோப் கட்டியிழுக்குறது அப்படியே தெரியும். இந்தப் படத்தில் ஒரு மசாலா பட சண்டைக்காட்சியாய் பார்க்கும் போது மிகச் சிறப்பாய் எடுத்துள்ளனர். நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள் கார்த்தியும் மற்ற அனைவரும். சண்டைகாட்சி இயக்குனர் யார் என்பது தெளிவாய் தெரியவில்லை. பாராட்டுக்குரியவர்.
இயக்குனர் சுராஜ் படங்களில் வழக்கமாய் காமெடி வொர்க்அவுட் ஆகும். தலைநகரம், மருதமலை போன்றவற்றின் வெற்றியை உறுதி செய்ததில் காமெடியின் பங்கு பெரியது. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்திலும் முதல் பாதி முழுவதும் கதைக்கு வேலையே வைக்காமல் காமெடி என்ற ஒன்றையே நம்பியிருக்கிறார். ஆனால் காமெடி தான் வராமல் ஏமாற்றிவிட்டது.
முதல் 15 நிமிடங்களில் காட்டிய வேகமும் விறுவிறுப்பும் அடுத்த 1 மணி நேரத்திற்கு காணமல் போனது, காமெடிக்காக கதையை கடைசி பெஞ்சுக்கு தள்ளியது, தெலுங்கு ஆடியன்ஸையும் கவர் பண்ண வேண்டும் என்பதற்காக பழைய தெலுங்கு பார்முலாவுக்குள் மாட்டிக்கொண்டது, கார்த்தியின் மீது அனுஷ்காவிற்கு காதல் வருவதற்கான சரியான காட்சிகளை அமைக்காதது, அனுஷ்காவின் காரக்டரை டெவலப் பண்ணாதது, சந்தானத்தின் 3 தங்கை கதாபாத்திரங்களை ஏதோ தப்பான இடத்தில் ஏனோ தானோவென அலையும் பென்களை போல சித்தரித்தது, ஒரு சி.எம் பெண்ணை கடத்திவந்தால் கடத்தியவனின் மனநிலை, கடத்தப்பட்ட பெண்ணின் மனநிலை இரு இரண்டையும் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் விளையாட்டுத்தனமாய் காட்சிகள் வைத்தது, வில்லன்களை ஸ்கார்ப்பியோ, கோட் சூட், கெக்கேபிக்கே சிரிப்பு, கெட்ட சேதி சொன்ன தன் ஆளை சுடும் லூசுதனம் தாண்டி டெவலப் பண்ணாதது, 6 பெரிய கார்களில் 10 பேர் மெஷின் கன்னால் விடாமல் ஆயிரக்கணக்கான குண்டுகள் பொழிய, 10அடி முன்னே ஒரு மாருதி வேனில் ஒரு முடி கூட உதிராமல், கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மூவரும் தப்பி வருவது, இப்படி ஏராளமான இடங்களில் இயக்குநர் சுராஜ் சறுக்கிவிட்டார்.
திரைக்கதை பலவீனமாய் போய்விட்டால் கார்த்தி போன்ற திறமையான நடிகர்களின் ஈடுபாடும், அனைத்து டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணாய்தான் போகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் பாடம் தான் இந்தப் படம்.
2012ல் தமிழ்சினிமாவில் நிறைய ஆரோக்கியமான படங்கள் வந்து வெற்றி பெற்றது. மசாலா-கமர்சியல்-பிரம்மாண்டம் என்ற பெயரில் வந்த மாற்றான்,பில்லா 2, தாண்டவம், சகுனி, முகமூடி போன்றவை காணாமல் போனது. 2013 ல் இது ரொம்ப சுமாரான ஸ்டார்ட். அதுவும் மாற்றானோடு ஒப்பிட்டால் இது இன்னும் பல படிகள் கீழே.
பிஸினெஸாய் பார்க்கும் போது இன்றைக்கு ரிலீஸ் செய்தது செம லக் என்று தான் சொல்லவேண்டும், விஸ்வரூபம் கான்சல், வேறு எந்த படமும் போட்டிக்கு இல்லாமல் இரண்டு நாள் புல் வசூல் ஆகும். அதன்பின் சமர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படங்களின் ரிசல்டைப் பொறுத்து இதன் விதி அமையும்.
I am kundalakesi 2nd std avaiyar arambapada salai
Rating: 1.5
Directed by : Suraj Produced by: K. E. GnanavelrajaStarring : Karthi, Anushka Shetty, Santhanam, Nikhita, Sanusha, Prathap Pothen
Music by : Devi Sri Prasad
Cinematography : Saravanan
Editing by : Praveen K. L., N. B. Srikanth
Studio : Studio Green
No comments:
Post a Comment