ஜெனீவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதத்துடன் தொடங்கிய வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தது. தீர்மானத்துக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தது.இந்தியா வலியுறுத்தல்
இலங்கை நிகழ்வுகள் பற்றி சுயேச்சையான நம்பகத்தனமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் தமிழருக்கு அரசியல் உரிமை தர ஆக்கபூர்வ நடவடிக்கை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய இந்தியா இலங்கை சம்பவங்கள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது என்று கூறினார். சர்வேதச பரிந்துரைகள் இந்த தீர்மானத்தில் இதில் இல்லை என்றும், இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment