மாணவன் தனியார் பள்ளியின் முதல் வகுப்பில் சரியாக படிக்காதபோதும், இரண்டாம் நிலைக்குப் பாஸ் செய்தனர். இரண்டாம் நிலையிலும் சரியாக படிக்காததால் மாணவனின் தந்தை இதுபற்றி பள்ளியிடம் கேட்டால் பதில் ஏதுமில்லை. அவனின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதித்துப்போன தந்தை துபாய் நீதிமன்றத்தில் பள்ளியின்மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஒரு கல்வி நிபுணரை நியமித்து
இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. நிபுணர் மேற்சொன்ன புகாரை ஆராய்ந்து அது
உண்மைதான் என்று அறிக்கை சர்ப்பித்தார்.
“செயல்திறன் குறைவாக இருந்தும் மேல்நிலைக்கு ஊக்குவித்தது,
மாணவனின் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஆகிய குற்றங்களுக்காக
பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு இழப்பீடாக மொத்த பள்ளிக்கட்டணம் Dhs 40,000 மற்றும் இழப்பீட்டுத் தொகை Dhs 37,500-யும் சேர்த்து
மொத்தமாய்ச் செலுத்துமாறு உத்தரவிட்டது.
வெறும் வியாபாரமாகிவிட்ட கல்வியை மேம்படுத்த
இதுபோன்ற நடவடிக்கை தேவை.
No comments:
Post a Comment