விடாது காதல் பாகம் 7

விடாது காதல் பாகம் 7

 

                    தன் காதலியுடன் கழித்த இனிமையான நேரங்களை நினைத்து சந்தோஷப் படுவதா? இனி என்று சந்திபோமோ என்று வருத்தப்படுவதா என்று குழம்பிக் கொண்டிருக்கையில் ரயில் புறப்பட்டது. ஜான்சியும் அவள் தோழிகளும், ராஜாவின் தோழர்களுக்கு “பை” சொல்லிவிட்டு விடுதிக்குச் சென்றனர். ராஜாவின் மனம் முழுவதும் ஜான்சியையே சுற்றி வந்தது. தன் காதலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை துணையாக வருவாளா என்ற கேள்வி அவன் மனதை மிகவும் வாட்டியது. அப்போது கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்ச்சி ஒன்று மனத்திரையில் ஓடியது.
ஒரு நாள் ராஜாவும், அவன் நண்பர்களும் கல்லூரி உணவகத்திற்கு சென்றனர். அங்கு வாசலில் ஒரு மாணவன் தன் சக வகுப்பு தோழிக்கு காதல் வாழ்த்து அட்டை கொடுக்க, எரிச்சலுடன் அந்த மாணவி அதை கிழித்து வீசி எறிந்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அன்று உணவகத்தில் அந்த நிகழ்ச்சியே சூடான விவாதமாக இருந்தது. அந்த பையன் இதற்கு முன் 2 முறை அவளிடம் தன் காதலை மறைமுகமாக சொல்லியிருக்கிறான். அவளும் நாசூக்காக மறுத்து வந்திருக்கிறாள். பிறர் முன் அவமான படுத்த கூடாது என்பதற்காக அவள் நடந்துக் கொண்ட விதத்தை அவன் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டான். பல தடவை அவள் தடுத்தும் அவன் இன்று இப்படி நடந்து கொண்டது அவள் மனதை எரிச்சல் அடைய வைத்தது. அதுவே அவளின் இந்த செய்கைக்கு காரணம். அந்த மாணவி வேறு யாரும் இல்லை. ஜான்சி தான் அது. அந்த சம்பவம் ராஜாவின் மனதில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காதல் என்றாலே பிடிக்காதவளா ஜானு என்று தனக்குள்ளேயே புலம்பினான். இருந்தாலும் தன் காதலை மறுக்க அவளிடம் காரணம் இருக்க முடியாது என நம்பினான்.
அவன் சிந்தனையை கலைக்க அவள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். “நான் ஹாஸ்டல் வந்துட்டேன். தூங்க போறேன். நீயும் நல்லா தூங்கு ராஜா” என்பதே அந்த குறுஞ்செய்தி. இவன் “எனக்கு தூக்கம் வரலை ஜானு” என பதில் அனுப்ப இப்படியே இவர்கள் அரட்டை தொடர்ந்தது.
ஜான்சி: ஏன் ராஜா? என்ன ஆச்சு? டிராவல் ல தூங்கமாட்டியா?
ராஜா: அப்படி இல்ல ஜானு! இன்னைக்கு தான் தூக்கம் வர மாட்டிக்குது. உனக்கு தூக்கம் வரலைனா நாம கொஞ்சம் நேரம் பேசிட்டுருக்கலாமா?
ஜான்சி: சரி. சொல்லு ராஜா.
ராஜா: உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் ஜானு?
ஜான்சி: அம்மா, அப்பா 2 பேரையும் ரொம்ப பிடிக்கும்.
ராஜா: (மனக்குரல் - என்னை சொல்லுவனு எதிர் பார்த்தேன்.) சரி. உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு ஜானு?
ஜான்சி: (மனக்குரல் – உன்னை சொல்லுவேனு எதிர்பார்க்கிறியா. சொல்லமாட்டேனே). கவி யும், பவியும். 2 பேர் கிட்டயும் தான் நான் குளோஸ் அ இருப்பேன்.
ராஜா: (மனக்குரல் – கேக்கலாமா. வேணாமா??) சரி வேற யாரும் இல்லையா ஜானு?
ஜான்சி: இல்லையே. ஸ்கூல் டேஸ் ல இருந்து கவி தான் எனக்கு ஃப்ரெண்ட். அதே அளவு குளோஸ் ஃப்ரெண்ட் இப்போ பவித்ரா.
ராஜா: (நான் எதிர்பாக்குறது தெரிஞ்சு தானா இப்படி பேசுற. எப்படி தான் அவளை சொல்ல வைக்கிறது ஆண்டவா. இந்த பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியலையே. டாபிக் ஐ மாத்தலாமா.) ஓகே கடைசியா என்ன படம் பாத்த ஜானு?
ஜான்சி: காதலில் சொதப்புவது எப்படி பாத்தேன். நீ என்ன படம் பாத்தா ராஜா?
ராஜா: நானும் அதான் பாத்தேன். சரி படம் பிடிச்சதா?
ஜான்சி: நல்லா இருந்தது. உனக்கு?
ராஜா: (டாபிக் உள்ள போக வேண்டியது தான்) பிடிச்சது. சரி ஜானு. நிஜ வாழ்க்கையில காதலை பத்தி என்ன நினைக்கிற?
ஜான்சி: காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல!
ராஜா: எங்கேயே கேட்ட மாதிரி இருக்கே...
ஜான்சி: கேட்டுருப்ப. கேட்டுருப்ப. எல்லாம் ஃபிலிம் டயலாக் தான். ஆனா அது உண்மை தான். எல்லாருக்கும் காதல் வாழ்க்கை நல்லபடியா அமையாது.அமையுறவங்களுக்கு ஓகே தான்.
ராஜா: அதுவும் சரி தான். சரி கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்க ஜானு?
ஜான்சி: இப்போதைக்கு எந்த முடிவும் இல்லை. எல்லாம் அப்பா, அம்மா பாத்துக்குவாங்க ராஜா.
ராஜா: (போச்சு டா). உனக்குனு எந்த ஆசையும் இல்லையா உன் வாழ்க்கை துணையை பத்தி?
ஜான்சி: நிறைய இருக்கு. முக்கியமான ஆசை எனக்கு ஒரு நல்ல நண்பனா, என்னை மதிக்கிறவனா, என்னை புரிஞ்சு நடந்துகிறவனா இருந்தாலே போதும்...
ராஜா: (அப்போ நம்ம எல்லா விதத்திலயும் சரியா வருவோம்). நல்ல ஆசை தான்.
ஜான்சி: சரி ராஜா. உனக்கு எப்படி பட்ட பொண்ணு வேணும்னு சொல்லவே இல்லை?
ராஜா: என் கனவுகளுக்கு ஏற்ற பொண்ணை நான் பாத்துட்டேன் ஜானு.
ஜான்சி: என்ன ராஜா காதலா? சொல்லவே இல்லை...
ராஜா: ஆமா ஜானு.
ஜான்சி: ரொம்ப வெட்க படாத. பொண்ணு யாரு? எங்க பாத்தா? எல்லாம் சொல்லு...
ராஜா: அது வந்து.... இன்னும் என் காதலை சொல்லுற அளவுக்கு எனக்கு தைரியம் வரலை ஜானு. தைரியம் வந்ததும் உன்கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்...
ஜான்சி: கவலை படாதே ராஜா. உன்னை போய் யாராவது வேணாம்னு சொல்ல முடியுமா? சொன்னா அவள் முட்டாளா தான் இருப்பாள். தைரியமா அந்த பொண்ணுகிட்ட காதலை சொல்லு. அவள் கண்ணை பாத்து அவளை எப்பவும் ராணி மாதிரி பார்த்துகுவனு நம்பிக்கை கொடு. உன் காதலை கண்டிப்பா ஏத்துக்குவா.
ராஜா: (மனதில் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்தது. இருப்பினும் காதலை சொல்ல இன்னும் தைரியம் வரவில்லை). தாங்க்ஸ் ஜானு. சீக்கிரமே சொல்லிடுறேன். சரி ஜானு. இன்னும் அரை மணி நேரத்தில நான் இறங்கிடுவேன். 4 மணி ஆக போகுது. நீ கொஞ்சம் நேரம் தூங்குறதுனா தூங்கு. நம்ம அரட்டையை அப்புறம் தொடரலாம்.


--விடாது தொடரும்...

No comments:

Post a Comment