Friday, February 1, 2013

என் மீது தவறா.. சொல்லுங்களேன் நண்பர்களே ...


பேங்க்ல பார்ம் பில் பண்ண ஒரு பொண்ணுகிட்ட பேனா கேட்டேன் ,

அது என்னைய நேசனல் ஹைவேஸ்ல லாரில அடிபட்டு செத்துப்போன நாய பாக்கிறது மாதிரி பார்த்திட்டு பேனா குடுத்திச்சு ,

நானும் குழம்பிப்போய் பாரம் பில்பன்னிட்டு பேனாவ திரும்ப குடுத்தேன்,

மறுபடியும் அதே லுக்.....

என்ன கருமம்டா இது , நாம என்ன இப்போ I love you வா சொன்னோம் பேனாதானே கேட்டோம்ன்னு யோசிச்சு பார்த்தா.....

ஹி,ஹி,ஹி... என் பாகட்டுலே பேனாவே இருக்கு...

@ பேங்க் போனா ஓசில தான் பேனா வாங்கணுமின்னு நம்ம சப் கான்சியஸ் மைண்ட்ல செட்டாகிடுச்சு போல ???

No comments:

Post a Comment