விடாது காதல் பாகம் 3

விடாது காதல் பாகம் 3

            ராஜாவிற்க்கு அவளுடைய நட்பு மிக முக்கியமானதாக தான் இருந்தது. ஆனால் அவளே தன் நட்பை அலட்சியப்படுத்தும் போது அவன் என்ன பண்ணுவான். மறுநாள் கல்லூரிக்கு செல்லும் ராஜா தன் மனதில் இருக்கும் காதலைப் பற்றியும், காதலியை பற்றியும் வினோத்திடம் மனம் விட்டு பேசுகிறான்.

“இளநிலை பட்டப்படிப்பு முதல் நாள் காலேஜ் ல தான் டா அவளை பார்த்தேன். பார்த்ததுமே ரொம்ப பிடிச்சுருந்தது. என்னோட கிளாஸ்ஸா தான் இருப்பா. பழக சான்ஸ் கிடைக்கும்னு பார்த்தேன். ஆனா அவ வேற டிபார்ட்மெண்ட் டா” என்று சலித்துக்கொண்டான். “அதுனால என்ன டா? போய் பேசிருக்க வேண்டியது தானா” என்று வினோத் கேட்க.. “அப்படி இல்ல மச்சி... எந்த பொண்ணுகிட்ட பேசவும் நான் இவ்வளோ தயங்குனது இல்லை. ஆனா கடைசி வரை அந்த பொண்ணுகிட்ட என்னால பேச முடியலை டா” என்று வருத்தப்பட்டான்.
“ஆனால் எனக்கு இப்போ அந்த பொண்ணு கூட பேச சான்ஸ் கிடைச்சது. பேஸ்புக் ல இருக்கா டா. அவ என்னோட ஃப்ரெண்ட் கவிதாக்கு குளோஸ் ஃப்ரெண்ட் டா. அவளை பற்றி விசாரிக்கிற மாதிரி மெசேஜ்வும், ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட்வும் அனுப்பினேன் டா. ஆனா ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட் அக்சப்ட் பண்ணலை டா” என்று ராஜா கூற... “ உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டா.. லவ் பண்ற பொண்ணுகிட்ட போய் இன்னொரு பொண்ணை பற்றி விசாரிச்சுட்டு ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட்வும் அனுப்பினா எப்படி டா அக்சப்ட் பண்ணுவாங்க. நீ கவிதாக்காக தான் அவகிட்ட பேசுறணு நினைச்சுருப்பாங்க. அதான் அவளை பற்றி மட்டும் ரிப்ளை பண்ணிருக்கங்கா” என்று வினோத் அவனை திட்டினான்.
“ஒரு வேளை நீ சொல்ற மாதிரி நினைச்சுருப்பாளோ? இப்போ என்ன பண்ண மச்சி? நீ தான் ஐடியா கொடுக்கணும். அவகிட்ட நான் பேசணும். பழகணும்.” “சரி டா!! கவிதா பற்றி விசாரிச்சு உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சொல்லிட்டு எப்படி இருக்கீங்க. என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு விசாரிச்சுட்டு உன்னோட மொபைல் நம்பர் கொடுத்து ஃப்ரீ யா இருக்கும் போது காண்டாக்ட் பண்ண சொல்லுடா” என்றான் வினோத்.
வினோத் சொன்னபடியே அவனும் ஜான்சிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அதை பார்த்த ஜான்சிக்கு திகைப்பாகவே இருந்தது. கல்லூரியை முடித்து 1 வருடத்திற்க்கு மேல் ஆகிறது. இந்த 4 வருடங்களில் ஒரு தடவை கூட பேசியது இல்லை. இப்போது கூட நான் கவிதாவை பற்றி எந்த தகவலும் கொடுக்கலையே!! பிறகும் ஏன் இவன் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான்? என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.

ராஜா மனதிலே அவளின் உருவம் அப்படியே பதிந்திருந்தது. கனவிலேயே மிதந்து கொண்டிருந்தான். கல்லூரி நாட்களில் ஒரு முறை பொங்கல் கொண்டாடியது அவனின் நினைவில் வந்தது. அன்று அவன் தேவதை பாவாடை தாவணியில் இருந்ததை பார்த்ததும் இன்றாவது பேசி விட வேண்டும் என முடிவு செய்து கவிதாவின் உதவியை நாடினான். கவிதாவோ அவன் தன்னை வெறுப்பேற்ற தான் இப்படி பேசுகிறான் என நினைத்து இதற்கெல்லாம் என் உதவியை எதிர் பார்க்காதே என கிண்டலாக கூறிவிட்டு நகர்ந்தாள். ராஜா கனவை அவனின் அலைபேசி ஒலி கலைத்தது.

No comments:

Post a Comment